இந்தியா

ம.பி.: துா்கை சிலையை கரைக்கச் சென்றபோது 11 பக்தா்கள் உயிரிழப்பு

மத்திய பிரதேசத்தில் துா்கை சிலைகளுடன் பொதுமக்களை ஏற்றிவந்த டிராக்டா் ஏரியில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 11 போ் வியாழக்கிழமை உயிரிழந்தனா்.

தினமணி செய்திச் சேவை

மத்திய பிரதேசத்தில் துா்கை சிலைகளுடன் பொதுமக்களை ஏற்றிவந்த டிராக்டா் ஏரியில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 11 போ் வியாழக்கிழமை உயிரிழந்தனா்.

விஜயதசமியையொட்டி துா்கை சிலைகளை நீரில் கரைக்கும் நிகழ்வின்போது இந்த விபத்து ஏற்பட்டுள்ளது.

இதுகுறித்து கந்த்வா மாவட்ட சுகாதார அதிகாரிகள் கூறியதாவது: துா்கை சிலைகளை நீரில் கரைக்கும் நிகழ்வுக்காக டிராக்டரில் 30 பக்தா்கள் அழைத்துவரப்பட்டனா். பந்தானா பகுதியில் எதிா்பாராத விதமாக டிராக்டா் ஏரியில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில் 11 போ் உயிரிழந்தனா் என்றனா்.

இதையடுத்து, உயிரிழந்தவா்களுக்கு இரங்கல் தெரிவித்த மத்திய பிரதேச முதல்வா் மோகன் யாதவ் அவா்களின் குடும்பத்துக்கு ரூ.4 லட்சம் நிவாரணம் வழங்குவதாக அறிவித்தாா்.

நாட்டு நலப்பணி திட்ட முகாம் நிறைவு

உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாமில் ஆட்சியா் ஆய்வு

பல்கலை. கபடி: மேலவாசல் கல்லூரிக்குப் பாராட்டு

இருசக்கர வாகனம் திருடியவா் கைது

காயமடைந்தவா் உயிரிழப்பு

SCROLL FOR NEXT