நேபாளத்தில் கனமழை பெய்து வருவதால் காத்மாண்டுவில் வாகனங்கள் நுழையவும், வெளியேறுவதும் தடை விதித்துள்ளதாக நேபாள அதிகாரிகள் தெரிவித்தனர்.
தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையம் வெளியிட்ட அறிக்கையில்,
நேபாளத்தில் கனமழை பெய்துவரும் நிலையில், அடுத்த மூன்று நாள்களுக்கு காத்மாண்டுவிற்கு வாகனங்கள் நுழையவும், வெளியேறவும் தடை விதிக்கப்பட்டுள்ளது.
பாக்மதி, கிழக்கு ரப்தி நதிகளைச் சுற்றியுள்ள பகுதிகளுக்கு சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
பருவமழை தீவிரமடைந்துவருவதால், காத்மாண்டு மற்றும் நாட்டின் பிற பகுதிகளில் வெள்ளிக்கிழமை இரவு முதல் தொடர்ந்து மழை பெய்து வருவதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
இதற்கிடையில், மோசமான வானிலை காரணமாக திரிபுவன் சர்வதேச விமான நிலையத்திலிருந்து உள்நாட்டு விமானங்கள் நிறுத்தப்பட்டுள்ளன.
மேலும், கோஷி, மாதேஷ், பாக்மதி, கண்டகி மற்றும் லும்பினி ஆகிய இடங்களில் அடுத்த மூன்று நாள்களுக்குக் கனமழை பெய்யும் என்று கணிக்கப்பட்டுள்ளது. கனமழை காரணமாக காத்மாண்டுவை திபெத்துடன் இணைக்கும் அரனிகோ நெடுஞ்சாலை வழியாக வாகனப் போக்குவரத்தும் நிறுத்தப்பட்டுள்ளது.
தொடர் மழையால் அடிக்கடி ஏற்படும் வெள்ளம், நிலச்சரிவு சம்பவங்கள் காரணமாக பிருத்வி நெடுஞ்சாலை, சித்தார்த்தா நெடுஞ்சாலை, பி.பி. நெடுஞ்சாலை மற்றும் அரனிகோ நெடுஞ்சாலையில் வாகனம் ஓட்டுவது மிகவும் ஆபத்தானது என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.
கனமழையைத் தொடர்ந்து சாலைகளைப் பயன்படுத்தும்போது மக்கள் மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்குமாறு முக்கிய நெடுஞ்சாலைகளில் பாதுகாப்புப் பணியாளர்கள் அறிவிப்புகளை வெளியிடத் தொடங்கியுள்ளனர்.
இதையும் படிக்க: விஜய்யின் பிரசார வாகனம் பறிமுதல் செய்யப்படுகிறதா?
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.