பாலக்காட்டில் சரக்கு ரயில் தடம்புரண்டதால் பல பயணிகள் ரயில்கள் தாமதமாகிவிட்டதாக ரயில்வே அதிகாரிகள் தெரிவித்தனர்.
கேரள மாநிலம், பள்ளிபுரம் நிலையம் அருகே ஞாயிற்றுக்கிழகைம காலை 11.30 மணியளவில் சரக்கு ரயில் பெட்டி ஒன்றின் சக்கரங்கள் தடம்புரண்டு விபத்துக்குள்ளானது.
இதுகுறித்து பாலக்காடு பிரிவு செய்தித் தொடர்பாளர் ஒருவர் கூறுகையில், மதியம் 12.50 மணியளவில், சக்கரங்கள் சீரமைக்கப்பட்டு, பிற்பகல் 1 மணியளவில் பயணிகள் ரயில் சேவைகள் மீண்டும் தொடங்கப்பட்டன என்றார்.
இதனால் குட்டிப்புரம் மற்றும் பட்டம்பி நிலையங்களுக்கு இடையில் அமைந்துள்ள பள்ளிபுரம் நிலையம் வழியாக செல்ல வேண்டிய நான்கு பயணிகள் ரயில்கள் சுமார் ஒரு மணி நேரம் தாமதமாகிவிட்டதாக ரயில்வே பயணிகள் சங்க உறுப்பினர்கள் தெரிவித்தனர்.
தடம்புரண்டதைத் தொடர்ந்து இரண்டு உள்ளூர் ரயில்கள் ரத்து செய்யப்பட்டதாகவும், அதன் விளைவாக சேவைகள் பாதிக்கப்பட்டதாகவும் அவர்கள் மேலும் கூறினர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.