கோவாவில் உணவு வாங்கித் தருவதாகக் கூறி காரில் அழைத்துச் சென்று, 7 வயது சிறுமியிடம் பாலியல் வன்கொடுமையில் ஈடுபட்ட இளைஞரை காவல் துறையினர் கைது செய்தனர்.
சிறுமியின் தந்தை அளித்த புகாரின்பேரில், போக்ஸோ பிரிவின் கீழ் காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
கோவாவின் பிகோலிம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் இச்சம்பவம் அரங்கேறியுள்ளது. வார இறுதி நாளான சனிக்கிழமை, இரவு உணவு வாங்கித் தருவதாகக் கூறி சத்யவான் அரிச்சந்திரா கோன்கர் (47) என்பவர் சிறுமியை காரில் அழைத்துச் சென்றுள்ளார்.
திரும்ப வரும்போது காரை நிறுத்திவிட்டு சிறுமியிடம் பாலியல் வன்கொடுமையில் ஈடுபட்டுள்ளார். இது குறித்து பாதிக்கப்பட்ட சிறுமியின் தந்தை அளித்த புகாரின் பேரில் காவல் துறையினர் பாரதி நியாய சன்ஹிதா, போக்ஸோ பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்தனர். பின்னர், சிலமணிநேரங்களிலேயே குற்றவாளியை பிகோலிம் காவல் துறையினர் கைது செய்தனர்.
பாதிக்கப்பட்ட சிறுமி பாம்போலிம் நகர மருத்துவமனையில் பரிசோதனைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
சுற்றுலாப் பயணிகள் அதிகம் வந்து செல்லும் கோவாவில், அப்பகுதியில் வசிக்கும் சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை நடந்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிக்க | உலகின் சிறந்த விஞ்ஞானிகள் பட்டியலில் 3 குவாஹாட்டி பல்கலைக்கழக பேராசிரியா்கள்!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.