2021 -2023 கணக்கெடுப்பின்படி நாட்டின் பாலின விகிதம் ஆயிரம் ஆண்களுக்கு 917 பெண்கள் என இருப்பதாக மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நலத் துறை கூடுதல் செயலாளர் மற்றும் இயக்குநர் ஆராதனா பட்நாயக் தெரிவித்துள்ளார்.
கருத்தரிக்கும்போது உருவாகும் கருவின் பாலினத்தை முன்கூட்டியே அறிவிப்பதற்கு தடை விதிக்கும் வகையிலான சட்டத்தை வலுப்படுத்தியதன் விளைவாக நாட்டில் பெண் குழந்தைகளின் பிறப்பு விகிதம் முன்பை விட அதிகரித்துள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
முன் கருத்தரிப்பு மற்றும் பிறப்புக்கு முன்பு கருவின் நோய் கண்டறிதல் நுட்பங்களை வலுப்படுத்தும் தேசிய உணர்திறன் ஆலோசனைக் கூட்டத்தில் அவர் பேசியதாவது,
''பாலின பிறப்பு விகிதத்தில் நேர்மறையான இலக்கை நாடு எட்டியுள்ளது. 2023ஆம் ஆண்டு எடுக்கப்பட்ட மாதிரிப் பதிவு முறைப்படி, பாலின விகிதம் 18 புள்ளிகள் அதிகரித்துள்ளது. அதாவது, 2016-18 காலகட்டத்தில் 1,000 ஆண்களுக்கு 819 பெண்கள் மட்டுமே இருந்த நிலையில், 2021-23 ஆண்டில் 917 பெண்களாக அதிகரித்துள்ளது.
2021 - 23 கணக்கெடுப்பின்படி ஆயிரம் ஆண்களுக்கு 917 பெண்கள் உள்ளனர். கருவின் பாலினத்தை முன்கூட்டியே அறிய தடை விதிக்கும் சட்டத்தை வலுப்படுத்தியதால் இந்த முன்னேற்றம் சாத்தியமாகியுள்ளது.
ஆண்களைக் காட்டிலும் பெண்கள் பிறப்பானது வலுவான நோய் எதிர்ப்பு சக்தி கொண்டதாகவும் அதிக மீள்தன்மையுடையதாகவும் உள்ளது. அதாவது, இயற்கையாகவே ஆண் குழந்தைகளைக் காட்டிலும் பெண் குழந்தைகள் உயிர்வாழ்தல் அதிக சாத்தியத்தைக் கொண்டது.
ஒரு சமூகமோ அல்லது தனி நபரோ ஆரோக்கியமான குழந்தையைப் பெற்றுக்கொள்வதில் கவனம் செலுத்த வேண்டுமே தவிர, எந்த பாலினக் குழந்தையைப் பெற்றுக்கொள்ள வேண்டும் என்பதில் அல்ல'' எனக் குறிப்பிட்டார்.
இதையும் படிக்க | பிகாரில் 100 வயதைக் கடந்த வாக்காளர்கள் இத்தனை பேரா?
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.