பிகாரில் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க கால அவகாசம் நீட்டிக்கப்படுவதாக தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் தெரிவித்தார்.
பிகார் சட்டப்பேரவைத் தேர்தலுக்கான வாக்குப் பதிவு இரண்டு கட்டங்களாக நடைபெறவுள்ளதை தேர்தல் ஆணையம் இன்று(அக். 6) அறிவித்தது. அதன்படி, நவம்பர் 6-இல் முதல்கட்ட வாக்குப்பதிவு, நவம்பர் 11-இல் இரண்டாம் கட்ட வாக்குப்பதிவும் நடைபெறவுள்ளது.
பிகாரில் முதல்முறை வாக்காளர்கள் 14 லட்சம் பேர் சேர்க்கப்பட்டு ஒட்டுமொத்தமாக 7.42 கோடி வாக்காளர்கள் இந்தத் தேர்தலில் வாக்களிக்க தயாராக உள்ளனர். இந்த நிலையில், வாக்காளர் பட்டியலில் பெயர் இல்லாதவர்களுக்காக பிகார் தேர்தலையொட்டி கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது.
அதன்படி, வேட்பாளர்கள் வேட்புமனு தாக்கல் செய்யப்படுவதற்கு 10 நாள்களுக்கு முன் வரை, வாக்காளர்கள் தங்கள் பெயர்களை வாக்காளர் பட்டியலில் சேர்த்துக்கொள்ளலாம் என்று தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் தெரிவித்தார்.
முதல்கட்டத் தேர்தலுக்கான வேட்புமனுத் தாக்கல் நவ. 10-ஆம் தேதியும், இரண்டாம் கட்டத் தேர்தலுக்கான வேட்புமனுத் தாக்கல் நவ. 13-ஆம் தேதியும் தொடங்கவுள்ளது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிக்க: பிகார் தேர்தல்: நவ. 6, 11 - இரண்டு கட்டங்களாக வாக்குப்பதிவு!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.