விமானப் படை நாள் அக். 8-இல் கொண்டாடப்படுவதையொட்டி விமானப் படையின் தலைமைத் தளபதி மக்களுடன் வாழ்த்துகளைப் பகிர்ந்துள்ளார்.
இந்திய விமானப்படை நிறுவப்பட்டதன் 93-ஆவது ஆண்டுக் கொண்டாட்டத்தையொட்டி விமானப்படை தலைமை மார்ஷல் அமர் ப்ரீத் வெளியிட்டுள்ள வாழ்த்து காணொலியில், ‘விமானப்படையின் அனைத்து வீரர்கள் சார்பாக நாட்டின் ஒவொரு குடிமகனுக்கும் வணக்கத்தை தெரிவிக்கிறேன்.
தங்களது தியாகம், அர்ப்பணிப்பு, தொழில்பக்தி ஆகியவற்றால் நமது நாட்டின் வான்வெளியை பாதுகாத்துவரும் வீர தீர போராளிகளுக்காக அர்ப்பணிக்கப்பட்டதே விமானப்படை நாளாகும்.
கடந்த 1932-இல், வெறும் 4 விமானங்களுடன் நிறுவப்பட்ட விமானப்படையானது, இன்று உலகின் 4-ஆவது பெரிய விமானப்படையாக உருவெடுத்துள்ளது” என்று மகிழ்ச்சியை வெளிப்படுத்தியுள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.