மகாராஷ்டிர மாநிலத்தில் சமீபத்திய பருவமழை, வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு ரூ. 31,628 கோடி இழப்பீட்டுத் தொகுப்பை அந்த மாநில அரசு அறிவித்துள்ளது.
இதுதொடர்பாக முதல்வர் தேவேந்திர ஃபட்னவீஸ் கூறியதாவது,
வெள்ளத்தால் சேதமடைந்த ஒவ்வொரு ஹெக்டேர் விவசாய நிலத்திற்கும் வேலைவாய்ப்பு உத்தரவாதத் திட்டத்தின் கீழ் அரசு ரூ. 47,000 ரொக்கமாகவும் ரூ. 3 லட்சம் உதவியாகவும் வழங்கும்.
அதேபோன்று கால்நடைகளின் இழப்பு குறித்து, விவசாயிகள் ஒரு கால்நடைக்கு ரூ.32 ஆயிரம் வழங்கப்படும் என்று வாராந்திர அமைச்சரவைக் கூட்டத்திற்குப் பிறகு செய்தியாளர் கூட்டத்தில் அவர் தெரிவித்தார்.
பருவமழை தொடக்கத்தில் 1.43 லட்சம் ஹெக்டேர் பரப்பளவில் விதைக்கப்பட்ட நிலையில், 68 லட்சம் ஹெக்டேர் பரப்பளவில் பயிர்கள் சேதமடைந்ததாக அவர் கூறினார். 36 மாவட்டங்களில் 29 மாவட்டங்களும், 358 தாலுக்காவில் 253 தாலுக்காக்களும் பாதிக்கப்பட்டுள்ளன.
பயிர் இழப்பு, மண் அரிப்பு, காயமடைந்தவர்களை மருத்துவமனையில் சேர்த்தல், நெருங்கிய உறவினர்களுக்கு கருணைத்தொகை, வீடுகள், கடைகள், கால்நடை கொட்டகைகளுக்கு ஏற்பட்ட சேதம் உள்ளிட்டவை இந்த தொகுப்பில் அடங்கும்.
கூடுதலாகப் பாதிக்கப்பட்ட அனைத்து விவசாயிகளுக்கு ஹெக்டேருக்கு ரூ. 10 ஆயிரம் மற்றும் சேதமடைந்த கிணற்றுக்கு ரூ. 30 ஆயிரமும் வழங்கப்படும்.
வரவிருக்கும் ரபி பருவத்திற்கு விவசாயிகள் தயாராவதற்கு, அவர்களை வலுப்படுத்துவதே அரசின் முன்னுரிமை என்று அவர் கூறினார். இந்த இழப்பீடு தொகை நேரடியாக விவசாயிகளின் வங்கிக் கணக்குகளில் வரவு வைக்கப்படும்.
மேலும், பயிர்க் காப்பீடு செய்துள்ள 45 லட்சம் விவசாயிகளுக்கு ஹெக்டேருக்கு ரூ. 17 ஆயிரம் காப்பீட்டுத் தொகை வழங்கப்படும் என்று அவர் கூறினார்.
விவசாயிகள் நம்பிக்கையை இழக்கக்கூடாது என்றும், அவர்கள் இருண்ட தீபாவளியை எதிர்கொள்ளாமல் இருப்பதை அரசு உறுதி செய்யும் என்றும் துணை முதல்வர் ஏக்நாத் ஷிண்டே கூறினார்.
இதையும் படிக்க: எல்ஐகே புதிய வெளியீட்டுத் தேதி!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.