பிகார் சட்டப்பேரவைத் தேர்தலில் உறுதியாகப் போட்டியிடுவேன் என்று ஜன்சுராஜ் கட்சித் தலைவர் பிரசாந்த் கிஷோர் தெரிவித்துள்ளார்.
பிகார் சட்டப்பேரவைத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு இரண்டு கட்டங்களாக நவ. 6 மற்றும் 11 ஆம் தேதிகளில் நடைபெறும் என்று இந்திய தேர்தல் ஆணையம் திங்கள்கிழமை அறிவித்தது.
பிகாரில் ஆட்சியில் உள்ள ஐக்கிய ஜனதா தளம் - பாஜக கூட்டணிக்கும் எதிர்க்கட்சியான ராஷ்டிரிய ஜனதா தளம் - காங்கிரஸ் கூட்டணிக்கும் கடுமையான போட்டிகள் நிலவுகின்றன.
இதனிடையே, ஓவைசியும், பிரசாந்த் கிஷோரும் தனித்தனியே தேர்தலில் போட்டியிடுகின்றனர். இவர்கள் கணிசமான இடங்களில் வெற்றி பெற வாய்ப்புள்ளதாக எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த நிலையில், பிகார் தேர்தலில் போட்டியிடுவதை உறுதி செய்துள்ள பிரசாந்த் கிசோர், நாளை மறுநாள் (நவ. 9) வேட்பாளர்கள் பட்டியலை வெளியிடவுள்ளதாக தெரிவித்துள்ளார்.
மேலும், அவர் தெரிவித்ததாவது:
“இந்த தேர்தலில் லாலு - பிரசாந்த் கிஷோருக்காக மக்கள் வாக்களிக்க மாட்டார்கள். தங்களின் குழந்தைகளுக்காகவும், அவர்களின் கல்வி மற்றும் வேலைவாய்ப்புக்காகவும், பிகாரின் மாற்றத்துக்காக வாக்களிப்பார்கள்.
இந்த தேர்தல், நாம் காணும் கனவின் தொடக்கமாக இருக்கும். அடுத்த 10 ஆண்டுகளில் நாட்டின் முன்னணி மாநிலமாக பிகார் இருக்கும்” எனத் தெரிவித்தார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.