மனுஸ்மிருதி, சனாதன தர்மத்தின் பெயரால் மக்களின் அடிப்படை உரிமைகளை மீறுபவர்களுக்கு பாடம்புகட்ட வேண்டும் என்று காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே கூறியுள்ளார்.
உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி பி.ஆர்.கவாய் மீது வழக்குரைஞர் ராகேஷ் கிஷோர் தனது காலணியை வீச முயன்ற சம்பவம் குறித்து பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே இதுபற்றி கூறுகையில்,
"உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி மீதான தாக்குதல் முயற்சி கண்டனத்திற்குரியது. உச்ச நீதிமன்றத்துக்கும் தலைமை நீதிபதிக்கும் இழைக்கப்பட்ட அவமானத்தை நாங்கள் கண்டிக்கிறோம்.
ஒரு வழக்கறிஞர் இதுபோன்று யோசித்தால் இது எந்த வகையான சித்தாந்தம்? அனைத்து மனிதர்களையும் சமமாக அங்கீகரிக்கவில்லை என்பதாகும். நாட்டில் இது ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக மக்களை அடிமைத்தனத்தில் வைத்திருந்த ஒரு மதத்தில் வேரூன்றியுள்ளது.
சுதந்திரத்திற்குப் பிறகும் அப்படிப்பட்ட மனநிலை இருந்தால் இத்தகைய வழக்குரைஞர்கள் இந்த நாட்டை எந்த மாதிரியான பாதையில் கொண்டு செல்ல விரும்புகிறார்கள் என்பதை கவனியுங்கள்.
இதுபோன்றவர்களை அனைத்து வழக்குரைஞர்களும் வழக்குரைஞர்கள் சங்கமும் கண்டிக்க வேண்டும். மனுஸ்மிருதி மற்றும் சனாதன தர்மத்தின் பெயரால் மக்களின் அடிப்படை உரிமைகளை மீறுபவர்களுக்கு பாடம்புகட்ட வேண்டும்.
சமூகத்தில் தேவையற்ற பதட்டத்தை பரப்பி அமைதியை சீர்குலைக்க முயற்சிப்பவர்களுக்கு பாடம் புகட்ட வேண்டும், அவர்கள் பொறுப்பேற்கப்பட வேண்டும்" என்று கூறினார்.
இதையும் படிக்க | சிறையில் இஸ்ரேல் ராணுவத்தினர் துன்புறுத்தினர்: கிரெட்டா தன்பெர்க்
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.