பிகாரில் இந்தியா கூட்டணி ஆட்சிக்கு வந்தால் மாநிலத்தில் உள்ள ஒவ்வொரு குடும்பத்திலும் ஒருவருக்கு அரசு வேலை கிடைப்பதை உறுதி செய்யும் வகையில் சட்டம் கொண்டு வரப்படும் என்று ஆர்ஜேடி தலைவர் தேஜஸ்வி யாதவ் கூறியுள்ளார்.
செய்தியாளர் சந்திப்பில் அவர் பேசியதாவது,
பிகாரில் இந்தியா கூட்டணி ஆட்சி அமைத்தால் மாநிலத்தில் உள்ள ஒவ்வொரு குடும்பத்திலும் ஒருவருக்கு அரசு வேலை கிடைப்பதை உறுதி செய்யும் வகையில் சட்டம் கொண்டு வரப்படும். புதிய அரசு ஆட்சியமைத்த 20 நாள்களுக்குள் இந்த சட்டம் இயற்றப்படும்.
தேசிய ஜனநாயகக் கூட்டணியால் 20 ஆண்டுகளாக இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பை வழங்க முடியவில்லை. ஆனால் நாங்கள் ஆட்சிக்கு வந்த 20 நாள்களுக்குள் சட்டத்தைக் கொண்டு வருவோம். மேலும் 20 மாதங்களில் செயல்படுத்தப்படுவது உறுதி செய்யப்படும் என்று அவர் கூறினார்.
கடந்த சட்டப்பேரவைத் தேர்தலிலும் அரசு வேலைகளை வழங்குவதாக நான் உறுதியளித்திருந்தேன். எனது குறுகிய ஆட்சிக் காலத்தில் ஐந்து லட்சம் பேருக்கு வேலைவாய்ப்புகள் வழங்கப்பட்டன. ஐந்தாண்டு பதவிக்காலம் எனக்குக் கிடைத்திருந்தால் எவ்வளவு பேருக்கு வேலைவாய்ப்பு கிடைத்திருக்கும் என்று கற்பனை செய்து பாருங்கள்.
சமீபத்தில் அரசு, நுகர்வோருக்கு மாதம் 125 யூனிட் இலவச மின்சாரம், வேட்பாளர்களுக்குத் தேர்வு கட்டணம் தள்ளுபடி, சமூகப் பாதுகாப்பு ஓய்வூதியங்கள் உயர்த்தப்பட்டது. தேர்தல் அறிவிப்புக்கு சுமார் ஒரு வாரத்திற்கு முன்பு மகிளா ரோஜ்கர் யோஜனா திட்டத்தின் மூலம் பெண்களுக்கு தலா ரூ.10 ஆயிரம் வழங்கப்பட்டது. பெண்களிடையே தொழில்முனைவோரை ஊக்குவிப்பதற்காக அறிமுகப்படுத்தப்பட்ட இந்தத் திட்டம், தேர்தலுக்கு முன்னதாக வாக்காளர்களுக்கு "லஞ்சம் கொடுக்கும்" முயற்சி என்று விமர்சகர்கள் கூறி வருவதாக அவர் கூறினார்.
இதையும் படிக்க: கடவுள், காமம், கன்னியாஸ்திரி! மரியா - திரை விமர்சனம்
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.