புணேவிலிருந்து தில்லி புறப்பட்ட ஆகாசா ஏர் விமானத்தின் மீது பறவை மோதியதால் விமானம் தில்லியில் பாதுகாப்பாக தரையிறக்கப்பட்டது.
மகாராஷ்டிர மாநிலம், புணேவில் இருந்து 200க்கும் மேற்பட்ட பயணிகளுடன் ஆகாசா ஏர் விமானம் காலை 7.50 மணிக்கு தலைநகர் தில்லி புறப்பட்டது.
இந்த நிலையில் விமானத்தின் மீது பறவை மோதியதால் விமானம் தில்லி இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையத்தில் பாதுகாப்பாக தரையிறக்கப்பட்டது.
தொடர்ந்து, அனைத்து பயணிகளும் பணியாளர்களும் விமானத்திலிருந்து இறக்கிவிடப்பட்டனர் என்று விமான நிறுவனம் அறிக்கை வாயிலாக தெரிவித்துள்ளது.
விமானம் பொறியியல் குழுவால் பரிசோதிக்கப்பட்டு வருகிறது என்றும் முழுமையான ஆய்வுக்குப் பிறகு சேவை மீண்டும் தொடங்கப்படும் என்றும் அந்த அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.
2023 முதல் 20 முக்கிய விமான நிலையங்களில் ஆண்டுக்கு 2,000க்கும் மேற்பட்ட பறவை/விலங்குகள் மோதிய சம்பவங்கள் பதிவாகியுள்ளன. 2025ஆம் ஆண்டு ஜூன் மாதம் வரை மட்டும் இதுபோன்று 641 சம்பவங்கள் நிகழ்ந்துள்ளன.
அதில் தில்லி இத்தகைய நிகழ்வுகளால் அதிகம் பாதிக்கப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.