ஜம்மு-காஷ்மீரின் உதம்பூரில் ஏற்பட்ட நிலச்சரிவில் பல வணிக கட்டடங்கள் சேதமடைந்தன.
ஜம்மு-ஸ்ரீநகர் தேசிய நெடுஞ்சாலையில் உள்ள சோம்ரோலி பகுதியில் உள்ள நர்சூ சந்தையில் ஞாயிற்றுக்கிழமை காலை 11.30 மணியளவில் நிலச்சரிவு ஏற்பட்டது. இதன்காரணமாக சமீபத்தில் திறக்கப்பட்ட ஹோட்டல் கட்டடம் மற்றும் இரண்டு கடைகள் சேதமடைந்தன என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.
நிலச்சரிவுக்கு முன்பாக சந்தைப் பகுதியில் இருந்து அனைவரும் வெளியேற்றப்பட்டதால், உயிரிழப்பு எதுவும் ஏற்படவில்லை என்று அவர்கள் மேலும் கூறினர். மீட்புக் குழுக்கள், காவல்துறை மற்றும் உள்ளூர் அதிகாரிகள் உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று மீட்புப் பணிகளை மேற்கொண்டனர்.
நிவாரணம் மற்றும் மீட்புப் பணிகள் போர்க்கால அடிப்படையில் நடைபெற்று வருவதாக உதம்பூர் மாவட்ட நிர்வாகம் உறுதிப்படுத்தியுள்ளது. இந்த சம்பவம் அப்பகுதியில் பீதியை ஏற்படுத்தியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.