பெண்கள் மீதான கறை மேற்கு வங்க முதல்வர் மமதா பானர்ஜி என பாஜக கடுமையாக விமர்சித்துள்ளது.
துர்காபூரில் மருத்துவ மாணவி கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட விவகாரத்தில், பெண்கள் இரவில் வெளியே செல்ல அனுமதிக்கக் கூடாது என கருத்து தெரிவித்திருந்ததைத் தொடர்ந்து, பாஜக இவ்வாறு குறிப்பிட்டுள்ளது.
மேலும், பாதிக்கப்பட்ட பெண் குற்றவுணர்வு கொள்ளும் வகையில், அவரின் நடத்தையை குறை கூறும் வகையிலும் மமதாவின் கருத்து உள்ளதாகவும் பாஜக சுட்டிக்காட்டியுள்ளது.
மேற்கு வங்க மாநிலம் துர்காபூரில் தனியார் மருத்துவக் கல்லூரி மாணவி ஒருவர், இரவு உணவுக்காக தோழியுடன் நள்ளிரவில் வெளியே சென்றுள்ளார். அவரை சிலர் கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர்.
இந்த விவகாரத்தில் இதுவரை 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களிடம் விசாரணை நடத்தி வருவதாகவும், எஞ்சியவர்களைத் தேடும் பணிகள் தீவிரமடைந்துள்ளதாகவும் அம்மாநில காவல் துறை தெரிவித்துள்ளது.
இந்த விவகாரத்தில் கருத்து தெரிவித்த முதல்வர் மமதா பானர்ஜி, இரவில் பெண்கள் விடுதியை விட்டு வெளியே செல்ல அனுமதிக்கக் கூடாது எனக் குறிப்பிட்டுப் பேசியிருந்தார்.
இது குறித்து பேசியதாவது, ''பாதிக்கப்பட்டவர் தனியார் மருத்துவக் கல்லூரியில் பயின்று வருகிறார். இதற்கு யார் பொறுப்பேற்க வேண்டும்? இரவு 12.30 மணிக்கு அவர் எப்படி வெளியே சென்றார்? பெண்கள் இரவில் வெளியே (கல்லூரி விடுதியில் இருந்து) செல்ல அனுமதிக்கக் கூடாது. அவர்கள் தங்களை பாதுகாத்துக்கொள்ள வேண்டும்'' எனப் பேசியிருந்தார்.
பெண்கள் இரவில் வெளியே செல்லக் கூடாது என்ற கருத்தை விமர்சிக்கும் வகையில் பாஜக செய்தித் தொடர்பாளர் கெளரவ் பாடியா தனது எக்ஸ் தளப் பக்கத்தில் பதிவிட்டுள்ளதாவது,
''வெட்கமில்லாத மமதா பானர்ஜி பெண்மையின் மீது ஏற்பட்ட ஒரு கறை. முதல்வராக இருப்பது அதற்கும் மேலான கறை. மேற்கு வங்கத்தில் ஆர்.ஜி. கர் மற்றும் சந்தேஷ்காலி விவகாரத்துக்குப் பிறகு, இப்போது இந்த கொடூரமான பாலியல் வன்கொடுமை நடந்துள்ளது. ஆனால், நீதிக்குப் பதிலாக, அவர் பாதிக்கப்பட்டவரைக் குறை கூறுகிறார்'' எனப் பதிவிட்டுள்ளார்.
மேலும், மமதா பானர்ஜி அராஜகவாதி என்றும் சட்டத்தின்படி இந்த விவகாரத்திற்கு பொறுப்பேற்று அவர் பதவி விலக வேண்டும் எனவும் குறிப்பிட்டுள்ளார்.
இதையும் படிக்க | இரவில் பெண்கள் வெளியே செல்ல அனுமதிக்கக் கூடாது: மமதா சர்ச்சைப் பேச்சு!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.