ஜஆர்சிடிசி ஊழல் வழக்கில் ஆர்ஜேடி தலைவர் லாலு பிரசாத் யாதவ், பிகார் முன்னாள் முதல்வர் ராப்ரி தேவி, மகன் தேஜஸ்வி யாதவ் மீது தில்லி நீதிமன்றம் பல்வேறு குற்றவியல் குற்றச்சாட்டுகளைப் பதிவு செய்துள்ளது.
பிகார் சட்டப்பேரவைத் தேர்தல் அடுத்த மாதம் நடைபெற உள்ள நிலையில் நீதிமன்றத்தின் இந்த உத்தரவு இந்தியா கூட்டணிக்கு நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த 2004-2009 வரை மத்திய ரயில்வே அமைச்சராக இருந்தபோது, அவரது பதவிக்காலத்தில் ஐஆர்சிடிசியின் இரண்டு உணவகங்களின் பராமரிப்பு உள்ளிட்ட பணிகளைத் தனியார் நிறுவனத்திற்கு வழங்குவதில் முறைகேடுகள் நடந்ததாக புகார் எழுந்தது.
இதுதொடர்பாக லாலு பிரசாத், தேஜஸ்வி உள்பட குடும்பத்தினர் மீது சிபிஐ வழக்குப்பதிவு செய்தது. இந்த வழக்கில் குற்றப்பத்திரிக்கையும் தாக்கல் செய்யப்பட்டு, தில்லி ரோஸ் அவென்யூ நீதிமன்றத்தில் விசாரணை நடைபெற்று வருகிறது.
மேலும், குற்றம் சாட்டப்பட்டவர்கள் இந்த வழக்கு தொடர்பாக விசாரணைக்காக இன்று நீதிமன்றத்தில் ஆஜராகினர். இந்த நிலையில், லாலு பிரசாத், அவரது மனைவி ராப்ரி தேவி, தேஜஸ்வி யாதவ் உள்ளிட்டோர் மீது குற்றச்சாட்டுகளைப் பதிவு செய்ய நீதிபதி உத்தரவிட்டார். இது கட்சியினரிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிக்க: இஸ்ரேல் - ஹமாஸ் இடையேயான போர் முடிந்தது: டிரம்ப்
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.