இடைத்தேர்தல் அறிவிப்பு 
இந்தியா

ஜூபிலி ஹில்ஸ் தொகுதிக்கான இடைத்தேர்தல் அறிவிப்பு!

ஜூபிலி ஹில்ஸ் இடைத்தேர்தல் அறிவிப்பு பற்றி..

இணையதளச் செய்திப் பிரிவு

தெலங்கானாவில் உள்ள ஜூபிலி ஹில்ஸ் சட்டப்பேரவை தொகுதிக்கான இடைத்தேர்தல் நவம்பர் 11 ஆம் தேதி நடைபெறுவதாக இந்தியத் தேர்தல் ஆணையம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

இடைத்தேர்தலில் போட்டியிடுவதற்கான வேட்புமனு தாக்கல் இன்று முதல் தொடங்கியுள்ளது. தொடர்ந்து அக்,21 வரை தாக்கல் செய்யலாம். வேட்புமனுக்கள் பரிசீலனை அக். 22 ஆம் தேதி என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. வேட்புமனுக்களைத் திரும்பப் பெறுவதற்கான கடைசி தேதி அக்டோபர் 24.

ஷேக்பேட்டையில் உள்ள தேர்தல் அதிகாரி அலுவலகத்தில் வேட்புமனுக்கள் பெறப்படும். ஜூபிலி ஹில்ஸ் தொகுதிக்கான இடைத்தேர்தல் நவம்பர் 11 ஆம் தேதி நடைபெறும், நவம்பர் 14 ஆம் தேதி வாக்குகள் எண்ணப்படும்.

கடந்த ஜூனில் பிஆர்ஆஸ் எம்எல்ஏ மகந்தி கோபிநாத் மாரடைப்பால் இறந்ததால் ஜூபிலி ஹில்ஸ் தொகுதிக்கு இடைத்தேர்தல் நடத்தப்படுகிறது.

தெலங்கானாவில் ஆளும் காங்கிரஸ் கட்சி, வி. நவீன் யாதவை வேட்பாளராக அறிவித்தது. எதிர்க்கட்சியான பி.ஆர்.எஸ்., மறைந்த எம்.எல்.ஏ.வின் மனைவி மகந்தி சுனிதாவை நிறுத்தியது. பாஜக இன்னும் தனது வேட்பாளரை அறிவிக்கவில்லை.

தேர்தல் ஆணையத்தின் புதிய நடவடிக்கைகள், மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களில் வேட்பாளர்களின் வண்ணப் புகைப்படங்களை ஒட்டுதல், செயற்கை நுண்ணறிவு அடிப்படையிலான கண்காணிப்பு மற்றும் முறைகேடுகளைத் தடுக்க முக்கியமான வாக்குச் சாவடிகளில் ஜிபிஎஸ்-இயக்கப்பட்ட கண்காணிப்பு உள்ளிட்டவை ஜூபிலி ஹில்ஸ் தொகுதியின் இடைத்தேர்தலில் நடைமுறையில் இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

The Election Commission of India (ECI) on Monday issued the gazette notification for the Jubilee Hills assembly by-poll, scheduled for November 11, formally initiating the process for filing of nominations.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பிக் பாஸை விமர்சிப்பதால் எந்தப் பலனும் இல்லை: விஜய் சேதுபதி எச்சரிக்கை

தீபாவளி பார்ட்டி... சாயிஷா!

இசை மழை... ஸ்ரேயா கோஷல்!

நாகை மீனவர்கள் 19 பேர் மீது தாக்குதல்!

கரூர் பலி: இலவச சட்ட உதவி மையத்தை அணுகிய பாதிக்கப்பட்டவர்கள்!

SCROLL FOR NEXT