அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் AP
இந்தியா

இந்தியாவும் பாகிஸ்தானும் ஒன்றாக வாழ்வார்கள்! டிரம்ப்

இந்தியா - பாகிஸ்தான் குறித்து அமெரிக்க அதிபர் டிரம்ப் கருத்து...

இணையதளச் செய்திப் பிரிவு

இந்தியாவும் பாகிஸ்தான் மிகவும் அமைதியாக ஒன்றாக இணைந்து வாழ்வார்கள் என்று அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார்.

எகிப்தின் ஷரம் அல்-ஷேக் நகரில் திங்கள்கிழமை (அக். 13) நடைபெற்ற சா்வதேச அமைதி மாநாட்டில், இஸ்ரேல் - ஹமாஸ் இடையே அமைதி ஒப்பந்தம் கையெழுத்தானது.

அமெரிக்க அதிபர் டிரம்ப், எகிப்து அதிபா் அப்தல் ஃபத்தா அல்-சிசி ஆகியோரின் இணைத் தலைமையில் நடைபெற்ற இந்த மாநாட்டில் பிரிட்டன் பிரதமா் கியா் ஸ்டாா்மா், பிரான்ஸ் அதிபா் இமானுவல் மேக்ரான், இத்தாலி பிரதமா் ஜாா்ஜியா மெலோனி, பாலஸ்தீன அதிபா் மஹ்முத் அப்பாஸ், பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் உள்பட 20-க்கும் மேற்பட்ட நாடுகளின் தலைவா்கள் பங்கேற்றனா்.

காஸா அமைதி ஒப்பந்தத்தில் முதல் ஆளாக டிரம்ப் கையெழுத்திட்ட நிலையில், கத்தாா், எகிப்து, துருக்கி ஆகிய நாடுகளின் தலைவா்களும் கையொப்பமிட்டனா்.

இந்த நிகழ்வில், பேச்சுவார்த்தை மூலம் மோதலை முடிவுக்கு கொண்டு வந்து பிராந்தியத்தில் அமைதியை நிலைநாட்டியதற்காக பிரதமர் நரேந்திர மோடி மற்றும் பாகிஸ்தான் பிரதமர் ஷெரீப் ஆகியோருக்கு டிரம்ப் பாராட்டு தெரிவித்தார்.

மேலும், “இந்தியா சிறந்த நாடு, அங்கு எனது நல்ல நண்பர் ஒருவர் உச்சத்தில் இருக்கிறார். அவர் அற்புதமான வேலையைச் செய்துள்ளார். பாகிஸ்தான் மற்றும் இந்தியா நாடுகள் மிகவும் அமைதியாக ஒன்றோடொன்று இணைந்து சிறப்பாக வாழ்வார்கள் என்று நான் நினைக்கிறேன்.” என டிரம்ப் தெரிவித்தார்.

அப்போது, டிரம்புக்கு பின் நின்றுகொண்டிருந்த பாகிஸ்தான் பிரதமர் ஷெரீப்பை நோக்கி சைகை காட்டிய டிரம்ப், ”அவர் அதைச் செய்யப் போகிறார்” எனத் தெரிவித்தார்.

இந்த மாநாட்டில் பேசிய பாகிஸ்தான் பிரதமர், ”இந்தியா - பாகிஸ்தான் மோதலில் டிரம்ப் தலையிடாமல் இருந்திருந்தால், நான்கு நாள்களில் முடிந்திருக்காது, அணு ஆயுதப் போரால் யாரும் உயிருடன் இருந்திருக்க மாட்டார்கள்” எனத் தெரிவித்தார்.

பிரதமா் நரேந்திர மோடிக்கு மாநாட்டில் பங்கேற்க அழைப்பு விடுக்கப்பட்ட நிலையில், இந்தியா சாா்பாக வெளியுறவுத் துறை இணையமைச்சா் கீா்த்தி வா்தன் சிங் பங்கேற்றாா்.

India and Pakistan will live together! Trump

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கேரளம்: மாணவிகள் ஹிஜாப் அணியத் தடை! கிறிஸ்தவ பள்ளிக்கு போலீஸ் பாதுகாப்பு!

கிறங்கடிக்கும் ரஷ்மிகா, மலைக்காவின் பாய்சன் பேபி!

ரோஹித் சர்மா, விராட் கோலியிடமிருந்து இந்திய அணி எதிர்பார்ப்பதென்ன?

பிக் பாஸ்: திவாகர் கேட்டவுடன் முத்தம் கொடுத்த அரோரா! புலம்பும் ரசிகர்கள்...

மலையாளத்தில் முதல்முறை... ரூ.300 கோடியைத் தாண்டிய லோகா!

SCROLL FOR NEXT