இந்தியா

வாக்காளர் பட்டியலில் முறைகேடு: மகாராஷ்டிர தேர்தல் அதிகாரியிடம் எதிர்க்கட்சிகள் புகார் மனு

தினமணி செய்திச் சேவை

மகாராஷ்டிரத்தில் வாக்காளர் பட்டியலில் முறைகேடுகள் உள்ளதாகவும், பிகாரைப் போன்று மகாராஷ்டிரத்தில் வாக்காளர் பட்டியலில் தீவிர திருத்தம் செய்யக் கோரியும் தலைமைத் தேர்தல் அதிகாரி சொக்கலிங்கத்திடம் சிவசேனை பிரிவு தலைவர் உத்தவ் தாக்கரே, மகாராஷ்டிர நவநிர்மாண் சேனை தலைவர் ராஜ் தாக்கரே, தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவார் உள்ளிட்ட எதிர்க்கட்சித் தலைவர்கள் மனு அளித்தனர்.

மகாராஷ்டிரத்தில் விரைவில் உள்ளாட்சித் தேர்தல் நடைபெற உள்ளது. இந்நிலையில், மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் வாக்காளர் பட்டியலில் முறைகேடுகள் உள்ளதாக கூறி தலைமைத் தேர்தல் அதிகாரியிடம் உத்தவ் தாக்கரே, ராஜ் தாக்கரே, தேசியவாத காங்கிரஸ் தலைவர்கள் மனு அளித்தனர்.

அதில், "வெளிமாநிலத் தொழிலாளர் ஏராளமானோர் மகாராஷ்டிரத்தில் உள்ளனர். அவர்களின் பெயர்கள் இரு மாநிலங்களில் இருப்பதைத் தடுக்க தேர்தல் ஆணையம் பிகாரைப் போன்று வாக்காளர் பட்டியலில் சிறப்பு தீவிர திருத்தம் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்' என்று வலியுறுத்தப்பட்டிருந்தது.

அவர்களைத் தொடர்ந்து காங்கிரஸ், இடதுசாரிகள், சமாஜவாதி கட்சி நிர்வாகிகளும் தலைமைத் தேர்தல் அதிகாரியைச் சந்தித்து மனு அளித்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

அடுத்த 24 மணி நேரத்தில் வடகிழக்குப் பருவமழை!

சக்தித் திருமகன் ஓடிடி தேதி!

மகாபாரதத்தில் கர்ணனாக நடித்த பங்கஜ் தீர் காலமானார்!

வியாபார வெற்றிக்கு 1000 வழிகள்

வெற்றியின் வரைபடம்

SCROLL FOR NEXT