பிகார் தேர்தலுக்கு பிறகு, கர்நாடகத்தின் அமைச்சரவையில் மறுசீரமைப்பு குறித்து பரிசீலினை செய்யப்படும் என முதல்வர் சித்தராமையா கூறியுள்ளார்.
கர்நாடக முதல்வர் சித்தராமையா, கடந்த அக்.13 ஆம் தேதி அவரது அமைச்சரவை சகாக்களுக்கு விருந்தளித்தார். அப்போது, அமைச்சரவையில் மாற்றம் கொண்டு வரப்படுவது குறித்து திட்டமிடப்பட்டதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
இதனைத் தொடர்ந்து, செய்தியாளர்களுடன் பேசிய முதல்வர் சித்தராமையா, அமைச்சரவை மாற்றம் மற்றும் மறுசீரமைப்பு ஆகியவைக் குறித்து பிகார் தேர்தலுக்கு பின்னர் முடிவு செய்யப்படும் எனத் தெரிவித்துள்ளார்.
முன்னதாக, கர்நாடகத்தில் காங்கிரஸ் கட்சியின் ஆட்சி அமைந்து வரும் நவம்பர் மாதம் இரண்டரை ஆண்டுகள் நிறைவடையும் நிலையில், துணை முதல்வர் டி.கே. சிவக்குமார் முதல்வராகப் பதவியேற்பார் எனத் தொடர்ந்து செய்திகள் பரவி வருகின்றன.
அவ்வப்போது, வெளியாகும் இந்தச் செய்திகளை முதல்வர் சித்தராமையா மற்றும் துணை முதல்வர் டி.கே. சிவக்குமார் ஆகியோர் மறுத்து வருவது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிக்க: மகாராஷ்டிர முதல்வர் முன்னிலையில் 61 நக்சல்கள் சரண்!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.