இந்தியா

குழந்தைகள் உரிமைகளை மீறும் பாகிஸ்தான்: ஐ.நா.வில் இந்தியா குற்றச்சாட்டு

"ஆப்கானிஸ்தான் மற்றும் இந்திய எல்லைப் பகுதிகளில் பள்ளிகள் மற்றும் மாணவர்களைக் குறிவைத்து தாக்குதல்களை நடத்துவதன் மூலம் ஐ.நா.வின் குழந்தைகள் மற்றும் ஆயுத மோதல்கள் (சிஏசி) தொடர்பான தீர்மானத்தை பாகிஸ்தான் மீறி வருகிறது' என்று ஐ.நா. பொது சபையில் இந்தியா தரப்பில் குற்றஞ்சாட்டப்பட்டது.

தினமணி செய்திச் சேவை

"ஆப்கானிஸ்தான் மற்றும் இந்திய எல்லைப் பகுதிகளில் பள்ளிகள் மற்றும் மாணவர்களைக் குறிவைத்து தாக்குதல்களை நடத்துவதன் மூலம் ஐ.நா.வின் குழந்தைகள் மற்றும் ஆயுத மோதல்கள் (சிஏசி) தொடர்பான தீர்மானத்தை பாகிஸ்தான் மீறி வருகிறது' என்று ஐ.நா. பொது சபையில் இந்தியா தரப்பில் குற்றஞ்சாட்டப்பட்டது.

ஐ.நா. பொதுச் சபைக்கு நாடாளுமன்ற குழுவை வழிநடத்திச் சென்றுள்ள பாஜக மூத்த தலைவரும் எம்.பி.யுமான நிஷிகாந்த் துபே, ஐ.நா. பொதுச் சபையில் நடைபெற்ற "குழந்தைகள் உரிமைகளை ஊக்குவித்தல் மற்றும் பாதுகாத்தல்' என்ற தலைப்பிலான அமர்வில் இந்தியாவின் அறிக்கையை வாசித்தபோது இக் கருத்தைத் தெரிவித்தார். அவர் மேலும் பேசியதாவது:

ஆப்கானிஸ்தான் எல்லையை ஒட்டியப் பகுதிகளில் பாகிஸ்தான் ராணுவம் அண்மைக் காலங்களில் தொடர் எல்லை தாண்டிய தாக்குதல்களையும், போர் விமானங்கள மூலமான தாக்குதல்களையும் நடத்தி வருகிறது. இந்தத் தாக்குதல்களில் ஏராளமான ஆப்கன் குழந்தைகள் உயிரிழந்துள்ளனர். பல குழந்தைகள் காயமடைந்துள்ளன.

அதுபோல, கடந்த மே மாதம் பாகிஸ்தான் ராணுவம் இந்திய எல்லைப் பகுதிகளில் அமைந்திருந்த குடியிருப்புகள் மற்றும் பள்ளிகள் மீது தொடர் துப்பாக்கிச் சூடு மற்றும் வெடிகுண்டு தாக்குதல்களை நிகழ்த்தியது. இதில், குழந்தைகள் உள்பட அப்பாவி பொதுமக்கள் பலர் உயிரிழந்தனர். குழந்தைகளுக்கு எதிரான தனது தீவிர அத்துமீறல்களிலிருந்து உலகை திசைத்திருப்பும் பாகிஸ்தானின் முயற்சியை இந்திய வன்மையாகக் கண்டிக்கிறது.

தனது எல்லைக்குள்ளும் குழந்தைகள் மற்றும் பெண்களை பாதுகாக்கவும், அவர்களின் உரிமை மீறல்களைத் தடுக்கவும் நடவடிக்கையை பாகிஸ்தான் மேற்கொள்ளவேண்டும் என்றார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தங்கம் விலை ரூ. 95,000-ஐ கடந்தது! புதிய உச்சம்...

மேட்டூர் அணை நிலவரம்!

தில்லி வந்தடைந்தார் இலங்கை பிரதமர்!

ரஷிய எண்ணெய் வாங்குவதை நிறுத்துவதாக மோடி என்னிடம் உறுதி! டிரம்ப்

இந்தோனேசியா எண்ணெய் கப்பலில் தீ: 10 பேர் பலி, 18 பேர் காயம்!

SCROLL FOR NEXT