இந்தியா

கோல்ட்ரிஃப் இருமல் மருந்து: ம.பி.யில் மேலும் இரு குழந்தைகள் இறப்பு; உயிரிழப்பு 24-ஆக அதிகரிப்பு

நச்சுத்தன்மையுள்ள ரசாயனம் கலந்த கோல்ட்ரிஃப் இருமல் மருந்தை உட்கொண்டதால், மத்திய பிரதேசத்தில் உடல்நிலை பாதிக்கப்பட்டிருந்த மேலும் இரு குழந்தைகள் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தன.

தினமணி செய்திச் சேவை

நச்சுத்தன்மையுள்ள ரசாயனம் கலந்த கோல்ட்ரிஃப் இருமல் மருந்தை உட்கொண்டதால், மத்திய பிரதேசத்தில் உடல்நிலை பாதிக்கப்பட்டிருந்த மேலும் இரு குழந்தைகள் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தன. இதையடுத்து, குழந்தைகளின் இறப்பு எண்ணிக்கை 24-ஆக அதிகரித்துள்ளது.

தமிழகத்தைச் சேர்ந்த நிறுவனத்தால் தயாரிக்கப்பட்ட கோல்ட்ரிஃப் இருமல் மருந்தை உட்கொண்டதால், மத்திய பிரதேசத்தின் சிந்த்வாராவில் குழந்தைகளுக்கு திடீரென சிறுநீரக செயலிழப்பு ஏற்பட்டு, அடுத்தடுத்து உயிரிழந்த விவகாரம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. சம்பந்தப்பட்ட இருமல் மருந்தில் நச்சுத்தன்மையுள்ள ரசாயனக் கலப்பு உறுதி செய்யப்பட்டதால், தமிழகம் உள்பட பல்வேறு மாநிலங்களில் இந்த மருந்துக்கு தடை விதிக்கப்பட்டது. தயாரிப்பு நிறுவன உரிமையாளரும் கைது செய்யப்பட்டார்.

இந்த இருமல் மருந்தால் உடல்நிலை பாதிக்கப்பட்டு, சிந்த்வாராவில் சிகிச்சைப் பெற்றுவந்த 9 மாதக் குழந்தையும், மற்றொரு 3 வயது குழந்தையும் கடந்த இரு நாள்களில் உயிரிழந்தன. இதையடுத்து, இறப்பு எண்ணிக்கை 24-ஆக அதிகரித்துள்ளதாக மாவட்ட கூடுதல் ஆட்சியர் தீரேந்திர சிங் புதன்கிழமை தெரிவித்தார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தங்கம் விலை ரூ. 95,000-ஐ கடந்தது! புதிய உச்சம்...

மேட்டூர் அணை நிலவரம்!

தில்லி வந்தடைந்தார் இலங்கை பிரதமர்!

ரஷிய எண்ணெய் வாங்குவதை நிறுத்துவதாக மோடி என்னிடம் உறுதி! டிரம்ப்

இந்தோனேசியா எண்ணெய் கப்பலில் தீ: 10 பேர் பலி, 18 பேர் காயம்!

SCROLL FOR NEXT