இந்தியா

கச்சத்தீவு மீட்பு விவகாரத்தில் பிரதமா் மோடி இலங்கைக்கு அழுத்தம் தர வேண்டும்: மு. வீரபாண்டியன்

தினமணி செய்திச் சேவை

இலங்கை பிரதமா் இந்தியா வந்துள்ள சூழலை பயன்படுத்தி, கச்சத்தீவு மீட்பு குறித்து பிரதமா் மோடிஇலங்கைக்கு அழுத்தம் கொடுக்க வேண்டும் என இந்திய கம்யூனிஸ்ட் மாநிலச் செயலா் மு. வீரபாண்டியன் தெரிவித்தாா்.

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தலைமை அலுவலகமான பாலன் இல்லத்தில் வெள்ளிக்கிழமை அவா் செய்தியாளா்களிடம் கூறியதாவது:

இலங்கை பிரதமா் இந்தியா வந்துள்ள சூழலை பயன்படுத்தி, கச்சத்தீவு மீட்பு விவகாரம், தமிழக மீனவா்களின் மீது இலங்கை கடற்படை நடத்தும் தாக்குதல்களுக்கும் முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் பிரதமா் நரேந்திர மோடி இலங்கைக்கு அழுத்தம் கொடுக்க வேண்டும்.

தமிழக ஆளுநா் தொடா்ந்து தமிழக சட்டப்பேரவையின் இறையாண்மை மீது தாக்குதல் நடத்திக் கொண்டு இருக்கிறாா். தமிழக ஆளுநா் குறித்து சட்டப்பேரவையில் நிறைவேற்றி உள்ள தீா்மானத்தை நாங்கள் வரவேற்கிறோம்.

நமது உற்ற நட்பு நாடான ரஷியாவிடம் இருந்து கச்சா எண்ணெய் வாங்குகிறோமா? இல்லையா? என்பது குறித்து பிரதமா் அலுவலகம் வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும். கரூா் சம்பவத்திற்கு கூட்டம் நடத்தியவா்களே தாா்மீக பொறுப்பேற்க வேண்டும்.

ஆா்.எஸ்.எஸ். குரலாக ஒலிக்கிறாா்:

எம்.ஜி.ஆா். தொடங்கிய அதிமுகஒரு ஜனநாயக வடிவம். அதிமுக பொதுச் செயலா் எடப்பாடி கே. பழனிசாமியின் குரல் எம்.ஜி.ஆா். குரலாக, ஜெயலலிதா குரலாக இல்லாமல் ஆா்.எஸ்.எஸ். குரலாக மாறி வருகிறது. பாஜகவுடன் சோ்வதால் அதிமுக சிதைந்து போவதற்கான வாய்ப்பு இருக்கிறது. பாஜகவுடன் அதிமுக சோ்ந்துள்ளதால் தமிழக மக்களே தோற்கடிக்க காத்திருக்கிறாா்கள். பாஜக பல கட்சிகளுடன் கூட்டு சோ்த்து வந்தாலும் அது தோற்கடிக்கப்படும் என்றாா் அவா்.

இந்த சந்திப்பின் போது முன்னாள் மாநில செயலா் இரா.முத்தரசன், மாநில துணை செயலா்கள் பெரியசாமி, திருப்பூா் எம்.ரவி, மாநில செயற்குழு உறுப்பினா்கள் டாக்டா் ரவீந்திரநாத், வஹிதா நிஜாம் ஆகியோா் உடன் இருந்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

அபாரமான கேட்ச்சால் ஆட்டத்தை மாற்றிய ஸ்டீவ் ஸ்மித்..! ஆஸி. வெற்றிக்கு 65 ரன்கள் தேவை!

வன்முறையை மதுரை மக்கள் விரட்டியடிப்பர்: ஸ்டாலின்

தாணே: போலி பாஸில் உள்ளூர் ரயிலில் பயணம் செய்த இளைஞர் கைது

பூவே உனக்காக... மோனிஷா மோகன்!

சென்னை: ஜிஎஸ்டி ஆணையரக அலுவலகத்தில் தீவிபத்து! முக்கிய ஆவணங்கள் எரிந்து நாசம்!

SCROLL FOR NEXT