பிரபல இந்திய கிரிக்கெட் வீரர் ரவீந்திர ஜடேஜாவின் மனைவி ரிவாபா ஜடேஜா, குஜராத்தின் புதிய அமைச்சராக வெள்ளிக்கிழமை பதவியேற்றார்.
குஜராத் அமைச்சரவை இன்று விரிவாக்கம் செய்யப்படுவதன் ஒரு பகுதியாகவே அமைச்சர்கள் 16 பேர் மொத்தமாக கூண்டோடு நேற்று பதவி விலகினர்.
குஜராத் மாநில பாஜகவில் பல்வேறு அமைப்பு ரீதியிலான மாற்றங்கள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இந்த மாத தொடக்கத்தில் குஜராத் பாஜக தலைவராக இருந்த மத்திய அமைச்சர் சி.ஆர். பாட்டீல் பதவி விலகினார். அவருக்குப் பதிலாக மத்திய இணையமைச்சர் ஜக்தீஷ் விஸ்வகர்மா பதவியேற்றார்.
கடந்த 2022 ஆம் ஆண்டு டிசம்பர் 12 ஆம் தேதி பூபேந்திர படேல் இரண்டாவது முறையாக குஜராத் முதல்வராகப் பதவியேற்றார். இந்த நிலையில், அமைச்சரவை விரிவாக்கம் செய்யப்பட்டது.
182 உறுப்பினர்களைக் கொண்ட குஜராத் சட்டப்பேரவையில் 27 பேர் வரை (மொத்த எம்எல்ஏக்களில் 15 சதவீதம்) அமைச்சர்களாகப் பதவி வகிக்க முடியும் என்ற நிலையில், 19 புதுமுகங்கள் உள்பட 26 பேர் புதிய அமைச்சரவையில் இடம்பெற்றுள்ளனர்.
புதுமுகங்களுக்கு அதிக வாய்ப்பளிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்பட்டது போலவே, இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர ஆல்-ரவுண்டர் ரவீந்திர ஜடேஜாவின் மனைவியும் ஜாம்நகர் வடக்கு எம்.எல்.ஏ.வுமான ரிபாவா ஜடேஜாவுக்கு அமைச்சராக வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
அவரைத் தவிர்த்து ஸ்வரூப்ஜி தாக்கூர், பிரவீன்குமார் மாலி, ருஷிகேஷ் படேல், தர்ஷ்னா வகேலா, குன்வர்ஜி பவாலியா, அர்ஜுன் மோத்வாடியா, பர்ஷோத்தம் சோலங்கி, ஜிதேந்திர வகானி, பிரஃபுல் பன்ஷேரியா, ஹர்ஷ் சங்கவி மற்றும் கனுபாய் தேசாய் உள்ளிட்டோரும் அமைச்சரவையில் இடம்பெற்றுள்ளனர்.
குஜராத்தில் புதிதாக பதவியேற்ற அமைச்சர்கள்
பூபேந்திர படேல் - முதல்வர்
திரிகம் பிஜல் சாங்கா
ஸ்வரூப்ஜி சர்தார்ஜி தாக்கூர்
பிரவீன்குமார் மாலி
ருஷிகேஷ் கணேஷ்பாய் படேல்
பிசி பாரண்டா
தர்ஷனா எம். வகேலா
கந்தரதலால் சிவலால் அம்ருதியா
குன்வர்ஜிபாய் மோகன்பாய் பவாலியா
ரிவாபா ஜடேஜா
அர்ஜுன்பாய் தேவபாய் மோத்வாடியா
டாக்டர் பிரத்யுமன் வாஜா
கௌசிக் காந்திபாய் வேகரியா
பர்ஷோத்தம்பாய் ஓ. சோலங்கி
ஜிதேந்திரபாய் சவ்ஜிபாய் வகானி
ராமன்பாய் பிகாபாய் சோலங்கி
கமலேஷ்பாய் ரமேஷ்பாய் படேல்
சஞ்சய்சிங் ராஜசிங் மஹிதா
ரமேஷ்பாய் பூராபாய் கட்டாரா
மனிஷா ராஜீவ்பாய் வக்கீல்
ஈஸ்வர்சிங் தாகோர்பாய் படேல்
பிரஃபுல் பன்சேரியா
ஹர்ஷ் சங்வி
டாக்டர் ஜெய்ராம்பாய் செமபாய் கமிட்
நரேஷ்பாய் மகான்பாய் படேல்
கனுபாய் மோகன்லால் தேசம்
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.