திரிபுராவில் சரக்கு ரயிலில் கடத்தப்பட்ட சுமார் 90,000 இருமல் மருந்து பாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டன 
இந்தியா

திரிபுரா: தடை செய்யப்பட்ட 90,000 இருமல் மருந்து பாட்டில்கள் பறிமுதல்!

திரிபுராவில் தடை செய்யப்பட்ட இருமல் மருந்து பாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டது குறித்து...

இணையதளச் செய்திப் பிரிவு

திரிபுராவில், சரக்கு ரயிலில் கடத்தப்பட்ட ரூ.4.5 கோடி மதிப்பிலான தடை செய்யப்பட்ட இருமல் மருந்து பாட்டில்களை பாதுகாப்புப் படையினர் பறிமுதல் செய்துள்ளனர்.

மேற்கு திரிபுரா மாவட்டத்தில், பாதுகாப்புப் படையினருக்கு கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில் ஜிரியானா ரயில் நிலையத்தில் சோதனை மேற்கொண்டனர்.

அப்போது, அங்குள்ள ஒரு சரக்கு ரயிலில் இருந்து இந்தியாவில் தடை செய்யப்பட்ட சுமார் 90,000 எஸ்கஃப் இருமல் மருந்து பாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

இந்த இருமல் மருந்துகள் தில்லியில் இருந்து திரிபுராவுக்கு கடத்தப்பட்ட நிலையில், அதன் மதிப்பு சுமார் ரூ.4.5 கோடி எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கோடீன் ஃபாஸ்பேட் மற்றும் ட்ரைப்ரோலிடைன் ஹைட்ரோக்ளோரைட் ஆகிய ரசாயனங்கள் இருப்பதால், எஸ்கஃப் இருமல் மருந்தானது இந்தியா மற்றும் வங்கதேசம் ஆகிய நாடுகளில் போதைப் பொருளாகப் பயன்படுத்தப்படுகின்றது.

முன்னதாக, மத்தியப் பிரதேசத்தில் கடந்த செப்டம்பர் மாதம் டைஎத்திலீன் கிளைகால் என்ற விஷப் பொருள் கலந்த இருமல் மருந்து கொடுக்கப்பட்ட சுமார் 24 குழந்தைகள் சிறுநீரகங்கள் செயலிழந்து பலியானது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிக்க: மாட்டிறைச்சி காட்சி.. தணிக்கை விவகாரம்! ஷேன் நிகாமின் படத்தை பார்க்க நீதிமன்றம் முடிவு!

In Tripura, security forces have seized banned cough medicine bottles worth Rs 4.5 crore smuggled in a freight train.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

இரவில் மின்னிய சிவகாசி: Drone காட்சி! வானத்திற்கு வண்ணம் பூசிய தீபாவளி!

டியூட், பைசன், டீசல் வசூல் எவ்வளவு?

ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதியாக வலுப்பெற்ற புயல் சின்னம்!

லட்டு, ஜிலேபி செய்த ராகுல்! விரைவில் திருமணம் செய்ய கடைக்காரர் கோரிக்கை!

தெரியாத எண்களில் இருந்து வரும் விடியோ அழைப்பு! பாலியல் மோசடி கும்பலாக இருக்கலாம்!

SCROLL FOR NEXT