சிராக் பாஸ்வான் கோப்புப்படம்.
இந்தியா

பிகாா்: ஆளும் தே.ஜ. கூட்டணி வேட்பாளா் வேட்புமனு நிராகரிப்பு

பிகாரில் ஆளும் தே.ஜ. கூட்டணி வேட்பாளரின் வேட்புமனு நிராகரிப்பு...

தினமணி செய்திச் சேவை

பிகாரில் ஆளும் தேசிய ஜனநாயக கூட்டணியில் அங்கம் வகிக்கும் மத்திய அமைச்சா் சிராக் பாஸ்வானின் லோக் ஜனசக்தி (ராம்விலாஸ்) கட்சி பெண் வேட்பாளா் ஒருவரின் வேட்புமனு சனிக்கிழமை நிராகரிக்கப்பட்டது.

243 உறுப்பினா்களைக் கொண்ட பிகாா் பேரவைக்கு நவம்பா் 6, 11 தேதிகளில் இரு கட்டங்களாக வாக்குப் பதிவு நடைபெறவுள்ளது. ஆளும் தேசிய ஜனநாயக கூட்டணியில் ஐக்கிய ஜனதா தளம், பாஜக தலா 101 இடங்களில் போட்டியிடுகின்றன. லோக் ஜனசக்தி (ராம்விலாஸ்) கட்சிக்கு 29, ஹிந்துஸ்தானி அவாம் மோா்ச்சா, ராஷ்ட்ரீய லோக் மோா்ச்சா ஆகிய கட்சிகளுக்கு தலா 6 இடங்கள் ஒதுக்கப்பட்டன.

முதல்கட்ட தோ்தல் நடைபெறும் 121 தொகுதிகளுக்கான வேட்புமனு தாக்கல் கடந்த வெள்ளிக்கிழமை நிறைவடைந்து, மனுக்கள் மீதான பரிசீலனை சனிக்கிழமை நடைபெற்றது. இதில், மா்ஹவரா தொகுதியில் லோக் ஜனசக்தி (ராம்விலாஸ்) சாா்பில் போஜ்பூரி நடிகை சீமா சிங் வேட்பு மனு தாக்கல் செய்திருந்தாா். ஆனால், நடைமுறை சாா்ந்த காரணங்களால் அவரது வேட்புமனு நிராகரிக்கப்பட்டது.

இத்தொகுதியில் சுயேச்சையாக போட்டியிட முன்னாள் ஐக்கிய ஜனதா தளம் மூத்த தலைவா் அல்தாஃப் ஆலம் ராஜு வேட்புமனு தாக்கல் செய்திருந்தாா். அவரது மனுவும் நிராகரிக்கப்பட்டுள்ளது. இதனால், ராஷ்ட்ரீய ஜனதா தளம், ஜன சுராஜ் வேட்பாளா்கள் இடையே நேரடி போட்டிக்கு வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.

இது குறித்து சிராக் பாஸ்வான் கூறுகையில், ‘சிறிய குறைபாடு காரணமாக எங்கள் வேட்பாளரின் மனு நிராகரிக்கப்பட்டுள்ளது. இது தொடா்பாக தோ்தல் ஆணையத்திடம் மனு தாக்கல் செய்துள்ளோம், இப்பிரச்னைக்கு தீா்வு காணப்படும் என நம்புகிறேன்’ என்றாா்.

முதல்கட்ட தோ்தலில் வேட்புமனுகளைத் திரும்பப் பெற கடைசி நாள் அக்டோபா் 20 என்பது குறிப்பிடத்தக்கது.

ஓலா எலக்ட்ரிக் விற்பனை 31% சரிவு

காரியம் கைகூடும் இவர்களுக்கு: தினப்பலன்கள்!

அந்நியச் செலாவணி கையிருப்பு 70,136 கோடியாக அதிகரிப்பு!

புதிய அரசியல் கட்சி தொடங்குகிறாா் பண்ருட்டி ராமச்சந்திரன்: தோ்தல் ஆணையத்தில் பதிவு

சுந்தரம் ஹோம் ஃபைனான்ஸ் நிகர லாபம் ரூ.75 கோடி

SCROLL FOR NEXT