மத்தியப் பிரதேசத்தின் இந்தூரில் மூன்று மாடிக் கட்டடத்தில் ஏற்பட்ட தீ விபத்தால் 11 வயது சிறுவன் உயிரிழந்தான். மேலும் 5 பேர் காயமடைந்தனர்.
பலசரக்கு வியாபாரியின் மூன்று மாடிக் கட்டடத்தில் அதிகாலை 2.15 மணியளவில் மின்கசிவு ஏற்பட்டதன் காரணமாகத் தீ விபத்து ஏற்பட்டது. வீட்டின் முன்பகுதியில் பழைய பொருள்கள் சேமிக்கப்பட்டிருந்ததாகவும், குடும்பத்தினர் பின்புறத்திலும் வசிந்து வந்துள்ளனர்.
எளிதில் தீப்பரவும் பொருள்கள் இருந்ததால், தீ வேகமாகப் பரவி கட்டடம் முழுவதும் சூழ்ந்தது. அந்த வீட்டில் நுழைவுவாயிலைத் தவிர கரும்புகை வெளியேற வழியில்லா நிலையில், முதல் மாடிக் கட்டடத்தில் வசித்த ஒரே குடும்பத்தைச் சேர்ந்த ஆறு பேர் மூச்சுத் திணறல் காரணமாக மயக்கமடைந்தனர், இருப்பினும் தீக்காயங்கள் எதுவும் ஏற்படவில்லை,.
காவல்துறையினரும் தீயணைப்பு வீரர்களும் அங்கிருந்தவர்களை வெளியே கொண்டு வந்து அருகிலுள்ள மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர், அங்கு 11 வயது சிறுவன் இறந்துவிட்டதாக மருத்துவர்கள் அறிவித்தனர்.
மற்ற ஐந்து பேரில் ஒரு தம்பதியர், அவர்களது இரண்டு மகள்கள் மற்றும் ஒரு மகன் சிகிச்சை பெற்று வருவதாகவும், அவர்களில் நான்கு பேர் உயிர்காக்கும் கருவிகள் பொருத்தப்பட்டிருப்பதாகவும் அவர் கூறினார்.
மீட்புப் பணியாளர்கள் இரண்டாவது மாடியில் வசித்த நான்கு பேர் கொண்ட மற்றொரு குடும்பத்தையும் மரத்தில் ஏறி மீட்டனர். சம்பவம் குறித்து விசாரிக்கப்படும் என்று போலீஸார் கூறினார்.
இதையும் படிக்க: ஐப்பசி மாதப் பலன்கள்: 12 ராசிகளுக்கும்!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.