புது தில்லி: நாட்டில் ஜிஎஸ்டி குறைக்கப்பட்டிருப்பதால், குளிர்சாதன வசதி, வாஷிங்மெஷின், தொலைக்காட்சி ஆகியவற்றின் விற்பனை அதிகரித்துள்ளது என்று மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.
பொருள்கள் மற்றும் சேவைகள் மீதான ஜிஎஸ்டி குறைக்கப்பட்டிருப்பதால் ஏற்பட்ட நன்மை, நாட்டில் உள்ள மக்களுக்கு செப்டம்பர் 22ஆம் தேதி முதல் நேரடியாகச் சென்றடைந்துள்ளது. ஜிஎஸ்டி குறைப்பின் பலன் நுகர்வோருக்குக் கிடைப்பதை மத்திய அரசு உறுதி செய்திருக்கிறது. சுமார் 54 பொருள்களின் விலைகள் குறைந்துள்ளது. இதனை அரசு கண்காணித்து வருகிறது என்றும் அவர் கூறினார்.
புது தில்லியில் இன்று மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் உள்ளிட்டோர் செய்தியாளர்களை சந்தித்தனர். அப்போது மத்திய இணையமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் பேசுகையில், ஜிஎஸ்டி குறைப்புக்குப் பிறகு எலக்ட்ரானிக் பொருள்கள் விற்பனையில் புதிய சாதனை படைக்கப்பட்டிருக்கிறது என்றார்.
சுயசார்பு இந்தியா என்ற திட்டத்தின் வளர்ச்சிக்கு புதிய உற்சாகம் ஏற்பட்டுள்ளது. ஜிஎஸ்டி குறைப்பு சந்தைகளில் புதிய உற்சாகத்தை ஏற்படுத்தியிருக்கிறது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.