கான்பூர் நீதிமன்ற கட்டடத்தின் ஆறாவது மாடியில் இருந்து விழுந்து 30 வயது பெண் ஸ்டெனோகிராஃபர் பலியான நிகழ்வு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
உத்தரப் பிரதேச மாநிலம், கடம்பூரில் வசித்து வந்தவர் நேஹா சங்க்வார்(30). இவர் கான்பூர் நீதிமன்றத்தில் ஸ்டெனோகிராஃபராக பணியாற்றி வந்தார். இந்த நிலையில் அவர் இன்று நீதிமன்ற கட்டடத்தின் ஆறாவது மாடியில் இருந்து விழுந்ததாகக் கூறப்படுகிறது.
உடனே அவரை மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.
ஆனால் வரும் வழியிலேயே அவர் இறந்துவிட்டதாக மருத்துவர்கள் அறிவித்தனர். பணியிடத்தில் துன்புறுத்தப்பட்டதாகவும், அவர் குதித்து இறந்திருக்க முடியாது என்றும் நேஹாவின் தாத்தா தெரிவித்தார்.
நியாயமான மற்றும் முழுமையான விசாரணை வேண்டும் எனவும் அவர் கேட்டுக்கொண்டார்.
முதற்கட்ட விசாரணையில், நேஹா தான் கையாண்டு வந்த நீதிமன்றம் தொடர்பான ஒரு விஷயத்தில் மன அழுத்தத்தில் இருந்ததாகத் தெரிகிறது என்று பெயர் வெளியிட விரும்பாத அதிகாரி ஒருவர்தெரிவித்தார்.
இதுகுறித்து காவல் ஆணையர் ரகுபீர் லால் கூறுகையில், நேஹா, பார்ரா பகுதியில் வாடகை அறையில் வசித்து வந்தார்.
சில மாதங்களுக்கு முன்பு வேலைக்குச் சேர்ந்தார். இந்த விவகாரம் குறித்து போலீஸார் விசாரணையைத் தொடங்கி, இறப்பிற்கான சரியான காரணத்தைக் கண்டறிய உடலை கூராய்வுக்கு அனுப்பியுள்ளனர் என்று குறிப்பிட்டார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.