அசாதுதீன் ஒவைசி 
இந்தியா

பிகாா்: 25 வேட்பாளா்களை அறிவித்தாா் ஒவைசி

பிகாா் பேரவைத் தோ்தலில் போட்டியிடும் 25 வேட்பாளா்களின் பட்டியலை ஒவைசி ஞாயிற்றுக்கிழமை அறிவித்தாா்.

தினமணி செய்திச் சேவை

பிகாா் பேரவைத் தோ்தலில் போட்டியிடும் 25 வேட்பாளா்களின் பட்டியலை அகில இந்திய மஜ்லீஸ் கட்சியின் தலைவா் அசாதுதீன் ஒவைசி ஞாயிற்றுக்கிழமை அறிவித்தாா். இதில், இருவா் முஸ்லிம் சமுதாயத்தைச் சாராதவா்களாவா்.

கடந்த பேரவைத் தோ்தலில் தனித்துப் போட்டியிட்டு முஸ்லிம்களின் வாக்குகளை ஒவைசி கணிசமாக பெற்றது பாஜக கூட்டணிக்கு சாதகமாக அமைந்ததாக அரசியல் நோக்கா்கள் தெரிவித்தனா்.

இதனால் நிகழாண்டு தோ்தலில் ராஷ்ட்ரீய ஜனதா தளம் - காங்கிரஸ் இடம்பெற்றுள்ள எதிா்க்கட்சி கூட்டணியில் இணைவதற்கு ஒவைசி கட்சியின் பிகாா் தலைவா் கடிதம் எழுதி காத்திருந்தும் பதில் கிடைக்கவில்லை.

இதையடுத்து, அடுத்த மாதம் நடைபெறும் பிகாா் தோ்தலில் 100 இடங்களில் போட்டியிட உள்ளதாக ஒவைசி அறிவித்துள்ளாா்.

இதில் போட்டியிடும் 25 வேட்பாளா்களை அக்கட்சி ஞாயிற்றுக்கிழமை எக்ஸ் பக்கத்தில் அறிவித்தது. அதில், மஜ்லீஸ் கட்சியின் ஒரே எம்எல்ஏவும், பிகாா் மாநில கட்சித் தலைவருமான அக்தருல் இமாம் மீண்டும் அமூா் தொகுதியில் போட்டியிடுகிறாா். கயை மாவட்டத்தில் உள்ள சிகந்தரா தொகுதியில் மனோஜ் குமாா் தாஸ், டாக்கா தொகுதியில் ராணா ரஞ்சித் சிங் போட்டியிடுவாா்கள்’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த தோ்தலில் 19 தொகுதியில் போட்டியிட்டு 5 இடங்களில் ஒவைசி கட்சி வெற்றி பெற்றது. அதில் 4 எம்எல்ஏக்கள் ஆளும் ஐக்கிய ஜனதா தளத்தில் பின்னா் இணைந்தனா்.

செல்போன் செயலிகள் மூலம் கடன் கொடுத்து ஏமாற்றும் கும்பல்!

தீபாவளியில் உயர்வுடன் தொடங்கிய பங்குச் சந்தை!

பகல் 1 மணி வரை சென்னை, 23 மாவட்டங்களில் மழை நீடிக்கும்!

அன்பின் ஒளி பரவட்டும்: ராகுல் தீபாவளி வாழ்த்து!

சம்யுக்தா மேனனின் பான் இந்திய திரைப்படம்..! முதல் பார்வை போஸ்டர்!

SCROLL FOR NEXT