கர்நாடக முதல்வர் சித்தராமையா 
இந்தியா

ஆர்எஸ்எஸ் இயக்கத்தை கர்நாடக அரசு தடை செய்யவில்லை: முதல்வர் சித்தராமையா!

ஆர்எஸ்எஸ் அமைப்பு தடை செய்யப்படுகிறதா என்ற கேள்விக்கு கர்நாடக முதல்வர் சித்தராமையா விளக்கம்...

இணையதளச் செய்திப் பிரிவு

ஆர்.எஸ்.எஸ். இயக்கத்தின் மீது கர்நாடக அரசு தடை விதிக்கவில்லை என கர்நாடக முதல்வர் சித்தராமையா தெரிவித்துள்ளார்.

மங்களூரில் நடைபெற்ற நிகழ்ச்சியில் செய்தியாளர்களுடன் பேசிய கர்நாடக முதல்வர் சித்தராமையா, ஆர்.எஸ்.எஸ். இயக்கத்தின் மீது தடை விதிக்கப்படுகிறது என்று பரவிய குற்றச்சாட்டுகளுக்கு விளக்கமளித்துள்ளார்.

அப்போது பேசிய அவர், ஆர்.எஸ்.எஸ். இயக்கத்தின் மீது கர்நாடக அரசு தடை விதிக்கவில்லை எனவும், இதுகுறித்து வெளியான உத்தரவில் ஆர்.எஸ்.எஸ். எனும் பெயர் குறிப்பிடப்படவில்லை எனவும் கூறியுள்ளார்.

இதுபற்றி, அவர் பேசியதாவது:

“பள்ளி மற்றும் கல்லூரிகளின் வளாகங்களில் நடைபெறும் நிகழ்ச்சிகள் மற்றும் நடவடிக்கைகளுக்கு அனுமதி கோருவது தொடர்பாக வெளியிடப்பட்ட உத்தரவில் ஆர்.எஸ்.எஸ். பற்றி எந்தவொரு இடத்திலும் குறிப்பிடப்படவில்லை.

அந்த உத்தரவில் ஆர்.எஸ்.எஸ். மட்டுமல்ல அனைத்து அமைப்புகள் மற்றும் சங்கங்களும் குறிப்பிடப்பட்டுள்ளது. முன்னர் பாஜக ஆட்சியில் பிறப்பிக்கப்பட்ட உத்தரவை மட்டுமே நாங்கள் மீண்டும் வலியுறுத்துகின்றோம். அவர்களால் அதைச் செய்ய முடிந்தால், ஏன் நம்மால் முடியாது?” என்று அவர் பேசியுள்ளார்.

கடந்த 2013 ஆம் ஆண்டு, முன்னாள் கர்நாடக முதல்வர் ஜகதீஷ் செட்டார் ஆட்சியில், பள்ளி, கல்லூரி வளாகங்களில் அமைப்புகள் மற்றும் சங்கங்களின் நடவடிக்கைகளுக்கு தடை விதிக்கப்பட்டது.

இதனைச் சுட்டிக்காட்டிய முதல்வர் சித்தராமையா, அதுபோன்ற உத்தரவையே தாங்களும் பிறப்பித்துள்ளதாகவும், சட்டம் ஒழுங்கு நிலையின் அடிப்படையில் மட்டுமே அமைப்புகளுக்கு அனுமதி வழங்கப்படும் எனவும் குறிப்பிட்டுள்ளார்.

இதையும் படிக்க: பிகாரில் முதற்கட்ட தேர்தலில் 61 வேட்பாளர்கள் வாபஸ்!

Karnataka Chief Minister Siddaramaiah has said that the Karnataka government has not imposed a ban on the RSS.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

செய்யாறு தொகுதியில் கேள்விக்குறியாக 34,219 வாக்காளா்கள்

இலங்கை வெள்ளத்தில் 607 ஆக அதிகரித்த உயிர்ப் பலிகள்! மீண்டும் நிலச்சரிவு எச்சரிக்கை!

இண்டிகோ விமான சேவைகள் பாதிப்பு: வருத்தம் தெரிவித்த சிஇஓ

மொபைல் போன் இறக்குமதி 0.02% ஆக சரிவு!

சேலையில் செதுக்கி... ஷ்ரத்தா ஸ்ரீீநாத்!

SCROLL FOR NEXT