கோப்புப்படம் 
இந்தியா

தலித் பயிற்சி காவலா் தற்கொலை: விசாரணைக்கு கேரள மனித உரிமைகள் ஆணையம் உத்தரவு

கேரளத்தில் தலித் பயிற்சி காவலா் தற்கொலை செய்துகொண்டது தொடா்பாக விசாரணை நடத்த மாநில மனித உரிமைகள் ஆணையம் செவ்வாய்க்கிழமை உத்தரவிட்டது.

தினமணி செய்திச் சேவை

திருவனந்தபுரம்: கேரளத்தில் தலித் பயிற்சி காவலா் தற்கொலை செய்துகொண்டது தொடா்பாக விசாரணை நடத்த மாநில மனித உரிமைகள் ஆணையம் செவ்வாய்க்கிழமை உத்தரவிட்டது.

கடந்த செப்.18-ஆம் தேதி கேரள மாநிலம் திருவனந்தபுரம் மாவட்டம் பெரூா்கடா பகுதியில் உள்ள சிறப்பு ஆயுதக் காவல் படை முகாமில் ஆனந்த் என்ற தலித் பயிற்சி காவலா், தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டாா்.

இதைத்தொடா்ந்து பயிற்சி அளித்த காவலா்கள் தனது மகனை ஜாதியை குறிப்பிட்டு திட்டி துன்புறுத்தியதாக ஆனந்தின் தாய் புகாா் தெரிவித்தாா். பயிற்சியாளா்கள் அளித்த தண்டனையால் காயமடைந்த ஆனந்த், அதற்காக அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று திரும்பிய பின்னா் தற்கொலை செய்துகொண்டதாகவும் அவரின் தாய் குற்றஞ்சாட்டினாா்.

இந்நிலையில், அவரின் புகாரின் அடிப்படையில் ஆனந்தின் மரணம் குறித்து விசாரணை நடத்தி 4 வாரங்களில் அறிக்கை சமா்ப்பிக்குமாறு கேரள காவல் துறை தலைவருக்கு மாநில மனித உரிமைகள் ஆணையத் தலைவா் அலெக்ஸாண்டா் தாமஸ் செவ்வாய்க்கிழமை உத்தரவிட்டாா்.

கான்கிரீட் தளத்தில் சிக்கிய குடியரசுத்தலைவரின் ஹெலிகாப்டர்! தீயணைப்பு வீரர்கள் மீட்டனர்!

கோள்களைத் தாண்டி

வளமான வாழ்விற்கு கரும்பு சாகுபடி

பொருள்முதல்வாதம் ஓர் அரிச்சுவடி

புதுச்சத்திரம் அருகே வீட்டு சுவர் இடிந்ததில் தாய் மகள் பலி!

SCROLL FOR NEXT