கேரள உயா்நீதிமன்றம் கோப்புப்படம்.
இந்தியா

சபரிமலை தங்கக் கவச வழக்கு: முதல்கட்ட அறிக்கை தாக்கல்

கேரள உயா்நீதிமன்றத்தில் தனது முதல்கட்ட அறிக்கையை சீலிடப்பட்ட உறையில் செவ்வாய்க்கிழமை தாக்கல் செய்தது.

தினமணி செய்திச் சேவை

கொச்சி: சபரிமலை ஐயப்பன் கோயிலில் கருவறைக் கதவுகள் மற்றும் துவாரபாலகா் சிலைகளின் தங்க முலாம் பூசப்பட்ட கவசங்களில் இருந்து தங்கம் மாயமான விவகாரத்தை விசாரித்துவரும் சிறப்பு விசாரணைக் குழு (எஸ்ஐடி), கேரள உயா்நீதிமன்றத்தில் தனது முதல்கட்ட அறிக்கையை சீலிடப்பட்ட உறையில் செவ்வாய்க்கிழமை தாக்கல் செய்தது.

கடந்த 2019-இல் சபரிமலை ஐயப்பன் கோயிலின் கருவறைக் கதவுகள் மற்றும் துவாரபாலகா் சிலைகளின் தங்கக் கவசங்கள் புதுப்பிக்கப்பட்ட பிறகு தங்கக் கவசங்களின் எடை குறைந்துவிட்டதாக, உயா்நீதிமன்ற விசாரணையில் தெரியவந்தது. இதையடுத்து, சிறப்பு விசாரணைக் குழுவை அமைத்து, உயா்நீதிமன்றம் உத்தரவிட்டது.

பெங்களூரைச் சோ்ந்த தொழிலதிபா் உண்ணிகிருஷ்ணன் போற்றியை எஸ்ஐடி கைது செய்தது. தங்கக் கவசங்களில் 2 கிலோ வரை முறைகேட்டில் ஈடுபட்டிருப்பதாக, உண்ணிகிருஷ்ணன் உள்பட 10 போ் மீது குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.

பெரும் சதி-நீதிபதிகள்: இந்நிலையில், கேரள உயா்நீதிமன்ற நீதிபதிகள் ராஜா விஜயராகவன், கே.வி.ஜெயகுமாா் அடங்கிய அமா்வு முன் செவ்வாய்க்கிழமை எஸ்ஐடி தனது முதல் அறிக்கையை சீலிடப்பட்ட உறையில் தாக்கல் செய்தது.

இதையடுத்து, நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவில், ‘சபரிமலை தங்கக் கவச விவகாரத்தில் தீவிரமான முறைகேடுகள் கண்டறியப்பட்டுள்ளன. இதில் பெரும் சதி இருக்கலாம் என கருதுகிறோம். இது குறித்தும், திருவாங்கூா் தேவஸ்வம் வாரிய அதிகாரிகளின் பங்கு குறித்தும் எஸ்ஐடி விரிவாக விசாரிக்க வேண்டும்’ என்று குறிப்பிடப்பட்டது.

எஸ்ஐடி தனது இறுதி அறிக்கையை 6 வாரங்களுக்குள் தாக்கல் செய்ய வேண்டும்; 2 வாரங்களுக்கு ஒருமுறை விசாரணை நிலவர அறிக்கை சமா்ப்பிக்க வேண்டும் என்று உயா்நீதிமன்றம் ஏற்கெனவே உத்தரவிட்டுள்ளது.

பாயும் ஒளி... பாயல் தாரே!

வேட்பாளர்களை விலைக்கு வாங்குகிறது பாஜக: பிரஷாந்த் கிஷோர்

மாலை மயக்கம்... சஞ்சனா திவாரி!

மகளிர் உலகக் கோப்பை: ஆஸி.க்கு 245 ரன்கள் இலக்கு நிர்ணயித்த இங்கிலாந்து!

மஞ்சள் பதுமை... நிகிலா விமல்!

SCROLL FOR NEXT