பிகாரில் தேடப்பட்டு வந்த 4 பிரபல ரௌடிகள் தில்லியில் சுட்டுக் கொல்லப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
பிகாரின் பிரபல ரெடியான ரஞ்சன் பதன் கும்பலைச் சேர்ந்தவர்கள். சட்டப்பேரவைத் தேர்தலுக்கு முன்னதாக மிகப்பெரிய குற்றச் செயலில் ஈடுபட திடடமிருந்ததாக உளவுத்துறை தகவல் அளித்தது. அதனடிப்படையில், பிகார் காவல்துறையினரும் தில்லி குற்றிப்பிரிவு காவல்துறையினரும் இணைந்து இன்று அதிகாலை சோதனையில் ஈடுபட்டனர்.
அப்போது நான்கு ரௌடிகளும் போலீஸாரை நோக்கி சுட்டனர். பதில் தாக்குதல் நடத்தியதில், பிகாரின் சீதாமர்ஹி மாவட்டத்தைச் சேர்ந்த ரஞ்சன் பதக் (25), பிம்லேஷ் மஹ்தோ அல்லது பிம்லேஷ் சாஹ்னி (25), மணீஷ் பதக் (33) மற்றும் அமன் தாக்கூர் (21) ஆகிய நால்வரும் சம்பவ இடத்திலேயே இறந்ததாக காவல்துறை இணை ஆணையர் சுரேந்தர் குமார் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.
என்கவுன்டரில் கொல்லப்பட்ட நான்கு பேரும் பிகாரில் கொலை, கடத்தல் உள்பட பல்வேறு வழக்குகளில தேடப்பட்டு வந்த குற்றவாளிகள் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிக்க: கரூர் பலி! நீதிமன்றத்தில் சிபிஐ அறிக்கை!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.