கேரள மாநிலம், இடுக்கி மாவட்டத்தில் அடிமாலி அருகே வெள்ளிக்கிழமை இரவு ஏற்பட்ட நிலச்சரிவில் ஒருவர் பலியானதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
இதுகுறித்து போலீஸார் கூறுகையில், நிலச்சரிவில் மற்றொருவர் படுகாயமடைந்தார். பலியானவர் அடிமாலி லட்சம்வீடு பகுதியைச் சேர்ந்த பிஜு என அடையாளம் காணப்பட்டுள்ளார்.
அவரது மனைவி சந்தியாவை, உள்ளூர்வாசிகள், போலீஸ் மற்றும் மீட்புப் பணியாளர்களின் ஆறு மணி நேரத்திற்கும் மேலான தீவிர முயற்சிக்குப் பிறகு மீட்டனர். பின்னர் அவர் உயர் சிகிச்சைக்காக கொச்சியில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனைக்கு மாற்றப்பட்டுள்ளார் எனத் தெரிவித்தனர்.
அடிமாலி அருகே தேசிய நெடுஞ்சாலையில் இரவு 10:00 மணியளவில் ஏற்பட்ட நிலச்சரிவில், குடியிருப்புப் பகுதிகளில் அதிக அளவு மண் மற்றும் குப்பைகள் சரிந்தன.
இரண்டு வீடுகள் முற்றிலுமாக இடிந்து விழுந்தன. மேலும் ஆறு வீடுகள் பகுதியளவு சேதமடைந்தன. முன்கூட்டியே மொத்தம் 22 குடும்பங்கள் பாதுகாப்பான இடங்களுக்கு மாற்றப்பட்டன.
நிலச்சரிவு ஏற்பட்டபோது பிஜுவும் சந்தியாவும் சான்றிதழ்கள் மற்றும் பிற பொருட்களை சேகரிக்க தங்கள் வீட்டில் இருந்ததாகக் கூறப்படுகிறது.
தேசிய பேரிடர் மீட்புப் படையின் உதவியுடன் இரவு முழுவதும் மீட்புப் பணிகள் தொடர்ந்தன.
இதனிடையே அக்டோபர் 28 வரை அடுத்த மூன்று நாள்களுக்கு கேரளத்தில் கனமழை முதல் மிக கனமழை வரை பெய்யும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. நிலச்சரிவுக்கு முன்னதாகவே அப்மக்கள் முகாம்களுக்கு மாற்றப்பட்டதால் பெருமளவிலான உயிர்ச்சேதம் தவிர்விக்கப்பட்டது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.