நாடு முழுவதும் ஏராளமான டிஜிட்டல் கைது மோசடிகள் நடந்திருப்பதால், அவை அனைத்தையும் ஒருங்கிணைத்து சிபிஐ விசாரணைக்கு மாற்றுவது குறித்து உச்ச நீதிமன்றம் பரிந்துரை செய்திருப்பதோடு, இது குறித்து அனைத்து மாநில அரசுகளுக்கும் நோட்டீஸ் பிறப்பித்துள்ளது.
டிஜிட்டல் கைது மோசடிக்கு உள்ளான ஹரியாணாவைச் சேர்ந்த வயதான தம்பதி, உச்ச நீதிமன்றத்துக்கு அனுப்பிய கடிதத்தினை ஏற்று, தாமாக முன் வந்து வழக்கை விசாரணைக்கு ஏற்றிருக்கிறது உச்ச நீதிமன்றம்.
உச்ச நீதிமன்ற நீதிபதிகள் சூரிய காந்த் தலைமையிலான அமர்வு, நாடு முழுவதும் இதுபோன்ற மோசடிகள் அதிகரித்து வருவது குறித்து கவலை தெரிவித்தனர். மேலும், இந்த வழக்குகள் அனைத்தையும் சிபிஐ வசம் ஒப்படைக்கலாமா என்று பரிசீலிக்க வேண்டும் என்றும் கூறினர்.
நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் இந்த சம்பவங்கள் நடந்துள்ளன. அனைத்து மாவட்டங்களிலும் காவல்துறையினர் இதனை விசாரிப்பதற்கு பதிலாக, அனைத்து வழக்குகளையும் சிபிஐ வசம் ஒப்படைத்தால் விசாரணை நடத்த வசதியாக இருக்கும் என்றும் குறிப்பிட்டனர்.
மத்திய அரசு சார்பில் வாதிட்ட வழக்குரைஞர் இதுபோன்ற கும்பல்கள் பெரும்பாலும் வெளிநாடுகளில் குறிப்பாக மியான்மர், தலாந்து போன்றவற்றில் இருந்துகொண்டு மோசடிகளை நடத்துகின்றன என்றார்.
ஹரியாணாவில் பதிவான இரண்டு டிஜிட்டல் கைது வழக்குகளும் சிபிஐக்கு மாற்றுவதற்கு ஆட்சேபம் இல்லை என்று காவல்துறை தரப்பில் கடிதம் அனுப்பப்பட்டுள்ளது என்றும் நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.
இதையடுத்து, இந்த வழக்குகள் சிபிஐக்கு மாற்றும்பட்சத்தில், அனைத்து வழக்குகளையும் விசாரிக்கும் வகையிலான தொழில்நுட்ப மற்றும் மனிதவள வசதிகள் இருக்கிறதா மற்றும் வழக்குகளின் எண்ணிக்கை குறித்தும் தகவல் அளிக்குமாறு மத்திய அரசுக்கும் சிபிஐக்கும் விளக்கம் கேட்டுள்ளது.
இதையும் படிக்க.. அமெரிக்காவுக்கு நிலம் விற்று, காட்டு வழியாக சென்ற 50 இளைஞர்கள்! ஒருவர் செலவிட்டது ரூ.57 லட்சம்
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.