தீவிர புயலாக வலுப்பெற்றது மோந்தா!
மோந்தா புயல் தீவிர புயலாக வலுப்பெற்றது பற்றி...
வங்கக் கடலில் உருவாகியுள்ள மோந்தா புயல் தீவிர புயலாக வலுப்பெற்றதாக இந்திய வானிலை ஆய்வு மையம் செவ்வாய்க்கிழமை காலை தெரிவித்துள்ளது.
தென்மேற்கு மற்றும் அதை ஒட்டியுள்ள தென்கிழக்கு வங்கக்கடலில் ஞாயிற்றுக்கிழமை இரவு 11.30 மணிக்கு மோந்தா புயல் உருவானது.
ஆந்திர மாநிலம் மச்சிலிப்பட்டினத்திலிருந்து தெற்கு-தென்கிழக்கே 190 கி.மீ. தொலைவிலும், காக்கிநாடாவிலிருந்து தெற்கு-தென்கிழக்கே 270 கி.மீ. தொலைவிலும் மையம் கொண்டுள்ளது.
Advertisement
Advertisement
தற்போது தீவிரப் புயலாக வலுப்பெற்று வடக்கு-வடமேற்கு திசையில் 15 கி.மீ. வேகத்தில் நகர்ந்துவரும் மோந்தா, ஆந்திர கடலோர பகுதிகளில், மசூலிப்பட்டினம் - கலிங்கப்பட்டினத்திற்கு இடையே காக்கிநாடாவிற்கு அருகில் இன்று மாலை அல்லது இரவு நேரத்தில் கரையைக் கடக்கும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
மேலும், இந்த தீவிரப் புயல் கரையைக் கடக்கும்போது மணிக்கு 110 கி.மீ. வேகத்தில் தரைகாற்று வீசக்கூடும். இப்புயல் கரையைக் கடந்த பின்னா் படிப்படியாக வலுவிழந்துவிடும்.
இந்த நிலையில், தற்போது ஆந்திரம் மற்றும் ஒடிஸா கடற்கரைகளில் பலத்த காற்று வீசத் தொடங்கியுள்ளது. கடலோர மாவட்டங்களில் மழையும் தீவிரமடைந்துள்ளது.
Cyclone Montha intensifies into a severe cyclonic storm
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.