தமிழக வெற்றிக் கழகத்தின் நிர்வாகக் குழு கூட்டம் நாளை (அக். 29) காலை நடைபெறவுள்ளதாக அக்கட்சியின் பொதுச்செயலாளர் என். ஆனந்த் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக தனத் சமூக வலைதளப் பக்கத்தில் அவர் பதிவிட்டுள்ளதாவது,
''தமிழக வெற்றிக் கழகத்தின் நிர்வாகக் குழுக் கூட்டம், நாளை காலை 10.00 மணிக்கு, பனையூர் தலைமை நிலையச் செயலகத்தில் நடைபெற உள்ளது.
தலைவர் விஜய் ஒப்புதலோடு நடைபெறும் இந்தக் கூட்டத்தில், நிர்வாகக் குழு உறுப்பினர்கள் அனைவரும் கலந்துகொள்ள வேண்டும் எனக் கேட்டுக்கொள்கிறேன்'' எனப் பதிவிட்டுள்ளார்.
தவெகவில் புதிய நிர்வாகிகளை நியமித்து விஜய் இன்று (அக். 28) உத்தரவிட்டிருந்தார். இதனால், புதிய நிர்வாகக் குழு கூட்டத்திற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதில் கட்சியின் அன்றாடப் பணிகள் மற்றும் செயல்பாடுகள் குறித்து விவாதிக்கப்படும் எனத் தெரிகிறது.
இதையும் படிக்க | காக்கிநாடாவுக்கு அருகில் கரையைக் கடக்கத் தொடங்கிய ‘மோந்தா' புயல்!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.