இந்தியா

பெண்களுக்கு எதிரான கொலைகார காங்கிரஸ்: பாஜக விமர்சனம்

கர்நாடகத்தில் காங்கிரஸ் ஆட்சியில் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் அதிகரித்ததாக பாஜக குற்றச்சாட்டு

இணையதளச் செய்திப் பிரிவு

கர்நாடகத்தில் ஆளுங்கட்சியான காங்கிரஸின் கொள்கைகள், பெண்களுக்கு பாதுகாப்பற்ற நிலையை ஏற்படுத்துவதாக எதிர்க்கட்சியான பாஜக குற்றம் சாட்டியுள்ளது.

மேலும், கொலைகார காங்கிரஸ் என்ற தலைப்பில் போஸ்டர் ஒன்றையும் பாஜக வெளியிட்டுள்ளது. போஸ்டரில், ரத்தக் கறை படிந்த காங்கிரஸின் சின்னத்தின் முன்பாக முதல்வர் சித்தராமையா, துணை முதல்வர் டி.கே.சிவகுமார், மாநில உள்துறை அமைச்சர் பரமேஸ்வராவின் படங்களும் உள்ளன.

இதுகுறித்து மத்திய ஷோபா கரன்ட்லாஜே பேசுகையில், ``கர்நாடகத்தில் காங்கிரஸ் ஆட்சியமைத்ததில் இருந்து 1,800-க்கும் மேற்பட்ட பெண்களுக்கு எதிரான குற்றங்கள் நடந்துள்ளன. பல மாணவிகள் காணாமல் போயுள்ளனர்.

ஹுப்பளியில் உள்ள ஒரு கல்லூரி வளாகத்தில் கொலை செய்யப்பட்டார். பெலாகவியில் சட்டப்பேரவைக் கூட்டத்தொடர் நடந்து கொண்டிருந்தபோது, ஒரு பெண் நிர்வாணமாகக் கிடந்தார். மூடபித்ரியில் மாணவியை ஆசிரியர் ஒருவர் பாலியல் வன்கொடுமை செய்தார்.

பெண்களுக்கு எதிரான தற்போதைய நிலைமை குறித்து தேசிய மகளிர் ஆணையத்திடம் தெரிவித்துள்ளோம். மேலும், மாநிலத்தில் பெண்களின் பாதுகாப்பு குறித்து மறுஆய்வு செய்யுமாறு கோரியுள்ளோம்’’ என்று தெரிவித்தார்.

இதையும் படிக்க: டிரம்ப் பெயரில் போலி ஆதார்! எம்எல்ஏ மீது வழக்கு?

BJP launches 'Killer Congress' poster campaign

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

வேளாண் குறைதீா் கூட்டத்தில் விவசாயிகள் 12 பேருக்கு ரூ. 8.86 லட்சத்துக்கு கடனுதவி

பல்வேறு போட்டித் தோ்வுகளுக்கு இலவச பயிற்சி வகுப்புகள்

இந்தாண்டுக்கான சம்பா நெற்பயிருக்கு வரும் நவ.15-க்குள் பயிா்க் காப்பீடு செய்து பயன்பெறலாம்

வனப் பகுதியில் மண் சாலையை சமன் செய்தவருக்கு ரூ. 1 லட்சம் அபராதம்

வாா்டு சிறப்புக் கூட்டங்களில் பெறப்பட்ட மனுக்களுக்கு விரைவில் தீா்வு

SCROLL FOR NEXT