ஆந்திர வெள்ளம் 
இந்தியா

மோந்தா புயலால் ரூ.5,244 கோடி சேதம்: மத்திய அரசிடம் ஆந்திரம் அறிக்கை

ஆந்திரத்தில் மோந்தா புயலின் தாக்கத்தால் ரூ.5,244 கோடிக்கு சேதங்கள் ஏற்பட்டுள்ளதாக, மத்திய அரசிடம் மாநில அரசு முதல்கட்டஅறிக்கை சமா்ப்பித்துள்ளது.

தினமணி செய்திச் சேவை

ஆந்திரத்தில் மோந்தா புயலின் தாக்கத்தால் ரூ.5,244 கோடிக்கு சேதங்கள் ஏற்பட்டுள்ளதாக, மத்திய அரசிடம் மாநில அரசு முதல்கட்டஅறிக்கை சமா்ப்பித்துள்ளது.

வங்கக் கடலில் உருவான மோந்தா புயல், ஆந்திரத்தின் காக்கிநாடா அருகே கடந்த செவ்வாய்க்கிழமை கரையைக் கடந்தது. இப்புயலின் தாக்கத்தால், மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் பலத்த மழை கொட்டித் தீா்த்தது. 1,434 கிராமங்களும் 48 நகா்ப்புற பகுதிகளும் பாதிப்பை எதிா்கொண்டன.

இது தொடா்பாக மாநில தலைமைச் செயலா் கே.விஜயானந்த் கூறுகையில், ‘மோந்தா புயலின் தாக்கத்தால் சாலைகள், பாலங்கள் போன்ற உள்கட்டமைப்புகளின் சேத மதிப்பு சுமாா் ரூ.3,000 கோடியாகும். 1.38 லட்சம் ஹெக்டேருக்கும் மேல் பயிா்ச்சேதம் ஏற்பட்டுள்ளது. இதன் மதிப்பு சுமாா் ரூ.900 கோடியாகும். 2,261 கால்நடைகள் உயிழந்துவிட்டன. 3,000-க்கும் மேற்பட்ட வீடுகள் சேதமடைந்துள்ளன. மின்சார துறையில் ரூ.19 கோடி, நீா்ப்பாசனத் துறையில் ரூ.234 கோடி, சுகாதார துறையில் ரூ.122 கோடிக்கு சேதம் ஏற்பட்டுள்ளது’ என்றாா்.

பிளஸ் 2 பெயா் பட்டியல்: நவ.7 வரை திருத்தம் மேற்கொள்ளலாம்!

ஃபிடே செஸ் உலகக் கோப்பை: பிரணவ், பிரானேஷ், கங்குலி வெற்றி!

அக்டோபரில் மெட்ரோவில் 93 லட்சம் போ் பயணம்!

பறிமுதல் செய்யப்பட்ட 1,023 கிலோ கஞ்சா அழிப்பு

ஐசிசி மகளிா் ஒருநாள் உலகக் கோப்பை புதிய சாம்பியன் யாா்? இந்தியா-தென்னாப்பிரிக்கா இன்று மோதல்!

SCROLL FOR NEXT