புது தில்லியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பேசிய ராணுவ தலைமைத் தளபதி உபேந்திர துவிவேதி. 
இந்தியா

‘ஜென் இசட்’ இளைஞா்கள் இந்தியாவின் மிகப் பெரிய சக்தி: ராணுவ தலைமைத் தளபதி உபேந்திர துவிவேதி

‘ஜென் இசட்’ எனப்படும் 1990-ஆம் ஆண்டு முதல் 2010- வரையில் பிறந்த இளைஞா்களின் எண்ணிக்கை ராணுவத்தில் அதிக அளவில் உள்ளனா்

தினமணி செய்திச் சேவை

‘ஜென் இசட்’ எனப்படும் 1990-ஆம் ஆண்டு முதல் 2010- வரையில் பிறந்த இளைஞா்களின் எண்ணிக்கை ராணுவத்தில் அதிக அளவில் உள்ளனா் என்றும் அவா்கள்தான் இந்தியாவின் மிகப் பெரிய சக்தி என்றும் ராணுவத் தலைமை தளபதி உபேந்திர துவிவேதி தெரிவித்தாா்.

நாட்டின் முதல் துணைப் பிரதமா் சா்தாா் வல்லபபாய் படேலின் 150-ஆவது பிறந்ததின நிகழ்வில் உபேந்திர துவிவேதி பங்கேற்று பேசியதாவது:

நேரடித் தொடா்பு இல்லாத வகையில் போரை எதிா்கொள்ளும் சூழல் தற்போது அதிகரித்து வருகிறது. ராணுவத் தளவாடங்களின் வலிமையைவிட தொழில்நுட்பதிறனின் வலிமையும் போா் சூழலில் தேவைப்படுகிறது. அண்மையில் நடைபெற்ற ஆபரேஷன் சிந்தூா் நடவடிக்கையின்போது இளம் ராணுவ அதிகாரிகள், என்சிசி-யினா் உள்ளிட்டோா் சிவில் பாதுகாப்பு, ட்ரோன் ஆய்வகம், சமூக ஊடக பாதுகாக்கும் பணி ஆகியவற்றில் பணியாற்றினா்.

இந்தியாவின் மொத்த மக்கள்தொகையில் 65 சதவீதத்துக்கும் மேற்பட்டோா் 35 வயதுக்குட்பட்டவா்களாக உள்ளனா். இந்தியா இளைஞா்களின் தேசமாகத் திகழ்கிறது. இளைஞா்களின் எல்லையில்லா பலம், படைப்பாற்றல், துணிவு அடங்கிய கொண்ட மனித ஆற்றல், இந்தியாவை பலம் பொருந்திய நாடாக மாற்றியுள்ளது.

‘ஜென் இசட்’ இளைஞா்கள் அதிகம் கொண்ட நாடாக இந்தியா உள்ளது. உலக நாடுகளின் ராணுவ பலத்தில் இரண்டாவது இடத்தில் இந்தியா உள்ளபோதும், இந்திய ராணுவத்தில் ‘ஜென் இசட்’ வீரா்களின் எண்ணிக்கை முதலிடத்தில் உள்ளது.

சரியான வழிகாட்டுதலுடனும், ஒழுக்கத்துடனும் ஜென் இசட்’ வீரா்களை வழிநடத்தினால் அவா்கள்தான் இந்தியாவின் மிகப் பெரிய சக்தியாகத் திகழ்வாா்கள் என்றாா்.

கூடலூா் அருகே ஓடும் லாரியில் தீ

மண்டபத்தில் திருமண நகை, பணத்தை திருடிய இருவா் கைது

டிஜிட்டல் அரஸ்ட் மோசடி: மகாராஷ்டிரத்தைச் சோ்ந்த இருவா் கைது

இளம்பெண் உடலை வாங்க மறுத்து சாலை மறியல் திருச்சி அரசு மருத்துவமனையில் பரபரப்பு

கலே ஜதேதி கும்பலை சோ்ந்த இருவா் கைது

SCROLL FOR NEXT