ஜம்மு-காஷ்மீர் பள்ளத்தாக்கு முழுவதும் பள்ளிகள் செயல்படும் நேரங்கள் திருத்தியமைக்கப்பட்டுள்ளதாக காஷ்மீர் பள்ளிக் கல்வி இயக்குநரகம் தெரிவித்துள்ளது.
பள்ளத்தாக்கில் குளிர்காலம் தொடங்கியதைத் தொடர்ந்து பள்ளி நேரங்களில் பருவகால மாற்றத்தின் ஒரு பகுதியாக அட்டவணையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
காஷ்மீர் பள்ளிக் கல்வி இயக்குநரகம் பிறப்பித்த உத்தரவின்படி,
நவம்பர் 1 முதல் பள்ளத்தாக்கு முழுவதும் உள்ள அரசு, அரசு உதவி பெறும் மற்றும் அங்கீகரிக்கப்பட்ட தனியார்ப் பள்ளிகளுக்கான நேரங்கள் திருத்தப்பட்டுள்ளன.
அதன்படி, ஸ்ரீநகர் நகராட்சி எல்லைக்குள் உள்ள பள்ளிகளுக்கான திருத்தப்பட்ட நேரங்கள் மாற்றப்பட்டுள்ளன. நவம்பர் 1 (சனிக்கிழமை) முதல் காலை 10 மணி முதல் பிற்பகல் 3 மணி வரை பள்ளிகள் செயல்படும்.
அதேபோன்று ஸ்ரீநகர் நகராட்சி எல்லைக்கு வெளியே உள்ள பள்ளிகளுக்கு, காலை 10:30 மணி முதல் அதிகாலை 3:30 மணி வரை செயல்படும் என்று உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
முன்னதாக, ஸ்ரீநகர் நகராட்சி எல்லைக்குள் உள்ள பள்ளிகளுக்கான நேரங்கள் காலை 9 மணி முதல் பிற்பகல் 3 மணி வரையிலும், வெளியே உள்ள பள்ளிகள் காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரையிலும் செயல்பட்டன.
திருத்தப்பட்ட நேரங்களை எந்தவித மாறுதலும் இல்லாமல் கண்டிப்பாக அனைத்து கல்வி நிறுவனங்களும் கடைபிடிக்குமாறு கல்வி இயக்குநரகம் அறிவுறுத்தியுள்ளது.
இதையும் படிக்க: வார பலன்கள்: 12 ராசிகளுக்கும்!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.