எரிவாயு சிலிண்டர் விலை உயர்வு 
இந்தியா

வர்த்தக சிலிண்டர் விலை குறைந்தது! வீடுகளுக்கான சிலிண்டர் விலையில் மாற்றமில்லை!!

வர்த்தக சிலிண்டர் விலை குறைக்கப்பட்டுள்ளது, ஆனால் வீட்டு உபயோக சிலிண்டர் விலையில் மாற்றம் செய்யப்படவில்லை.

இணையதளச் செய்திப் பிரிவு

நாட்டில், வர்த்தகப் பயன்பாட்டுக்கான சிலிண்டர் விலை ரூ.51.50 குறைக்கப்பட்டுள்ளது. வீட்டுப் பயன்பாட்டுக்கான சிலிண்டர்கள் விலை மாற்றமின்றி நிர்ணயிக்கப்பட்டுள்ளது. செப்டம்பர் 1ஆம் தேதி முதல் இது நடைமுறைக்கு வருகிறது.

சர்வதேச சந்தை நிலவரப்படி சமையல் எரிவாயு உருளை விலை மாதந்தோறும் மாற்றியமைக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில், வர்த்தக பயன்பாட்டுக்கான சமையல் எரிவாயு சிலிண்டர் விலை ரூ.51.50 காசுகள் குறைக்கப்பட்டு சென்னையில் ரூ.1738 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

வர்த்தக சிலிண்டர்களின் விலைக் குறிப்பின் காரணமாக புது தில்லியில் ரூ.1580 ஆகவும், கொல்கத்தாவில் ரூ.1684 ஆகவும், மும்பையில் ரூ.1531 ஆகவும் விலை குறையும்.

அதுபோல, வீட்டு உபயோகத்துக்கான சிலிண்டர் அதாவது 14.2 கிலோ எடையுள்ள சிலிண்டர்களின் விலையில் மாற்றம் எதுவும் செய்யப்படாமல், அதன் விலை சென்னையில் ரூ.868.50 ஆக தொடர்கிறது.

வீட்டுப் பயன்பாட்டுக்கான சிலிண்டர் விலை புது தில்லியில் ரூ.853 ஆகவும், கொல்கத்தாவில் ரூ.852 ஆகவும், மும்பையில் ரூ.582 ஆகவும் விற்பனையாகி வருகிறது.

சர்வதேச சந்தையில் சமையல் எரிவாயு மற்றும் மண்ணெண்ணெய் விலை மாதம் ஒரு முறை மாற்றியமைக்கப்படுகிறது. இந்த மாதம், ஆகஸ்ட் மாதத்தை விட வர்த்தக பயன்பாட்டுக்கான சிலிண்டர் விலை குறைக்கப்பட்டுள்ளது. இதன் மூலம், உணவகங்கள், சிறு நிறுவனங்களுக்கான செலவு குறையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ஒவ்வொரு மாநிலத்திலும் விதிக்கப்படும் வரி நிலவரத்துக்கு ஏற்ப, சிலிண்டர்களின் விலைகளும் மாநிலத்துக்கு மாநிலம் மாறுபடுகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பயனாளிகளுக்கு தீா்வு ஆணை: அமைச்சா் காந்தி வழங்கினாா்

சிவன் சம்பா நெல் விதைகளை மானிய விலையில் பெற அழைப்பு

வீட்டில் நகை திருட்டு: பணிப்பெண் கைது

மழை - வெள்ளத்தில் தத்தளிக்கும் ஜம்மு-காஷ்மீா்: வீடு இடிந்து இருவா் உயிரிழப்பு; இயல்பு வாழ்க்கை முடக்கம்

இந்தோனேசியாவில் மாயமான ஹெலிகாப்டா்: தேடும் பணி தீவிரம்

SCROLL FOR NEXT