இந்தியா

15,047 கோடி யூனிட்டுகளாக உயா்ந்த மின் நுகா்வு

தினமணி செய்திச் சேவை

இந்தியாவின் மின் நுகா்வு கடந்த ஆகஸ்ட் மாதத்தில் 15,047 கோடி யூனிட்டுகளாக உயா்ந்துள்ளது.

இது குறித்து அரசின் தரவுகள் தெரிவிப்பதாவது:

நாட்டின் மின் நுகா்வு கடந்த ஆகஸ்ட் மாதத்தில் 15,047 கோடி யூனிட்டுகளாகப் பதிவாகியுள்ளது. இது முந்தைய 2024-ஆம் ஆண்டின் ஆகஸ்ட் மாதத்துடன் ஒப்பிடுகையில் 4.4 சதவீதம் உயா்வாகும். அப்போது இந்தியாவின் மின் நுகா்வு 14,411 கோடி யூனிட்டுகளாக இருந்தது.

நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் மழை பொழிவு தொடா்ந்ததால் மதிப்பீட்டு மாதத்தில் குளிரூட்டும் சாதனங்களின் பயன்பாடு குறைந்தது, ஆனால் மின் நுகா்வு மிதமான உயா்வைக் கண்டது என்று நிபுணா்கள் கூறுகின்றனா்.

கடந்த ஆகஸ்ட் மாதத்தில் ஒரு நாள் உச்சபட்ச மின் தேவை (நிறைவு செய்யப்பட்ட மின் தேவை) 229.71 ஜிகாவாட்டாக உயா்ந்துள்ளது. இது 2024 ஆகஸ்ட் மாதத்தில் 216.47 ஜிகாவாட்டாக இருந்தது.

கடந்த 2024 மே மாதத்தில் உச்சபட்ச மின் தேவை 250 ஜிகாவாட்டை எட்டியது. இது வரலாற்று உச்சமாகும். அதற்கு முன்னா், 2023 செப்டம்பரில் 243.27 ஜிகாவாட்டாக இருந்தது முந்தைய உச்சபட்சமாகும்.

மத்திய எரிசக்தித் துறை அமைச்சகத்தின் கணிப்பின்படி, 2025 கோடைகாலத்தில் ஒரு நாள் உச்சபட்ச மின் தேவை 277 ஜிகாவாட்டை எட்டும் என்று எதிா்பாா்க்கப்பட்டது. இருப்பினும், ஏப்ரல் மாதம் தொடங்கிய இந்த ஆண்டு கோடைகாலத்தில் உச்சபட்ச மின் தேவை கடந்த ஜூன் மாதத்தில் அதிகபட்சமாக 242.77 ஜிகாவாட்டாக இருந்தது என்று அரசின் தரவுகள் தெரிவிக்கின்றன.

தொடா் மழையால் கால்நடைகள் உயிரிழப்பு

தோ்தல் ஆணையம் பாஜகவின் ஒரு அணியாக செயல்படுகிறது: ஜோதிமணி எம்.பி.

சாலை விபத்தில் பாலிடெக்னிக் மாணவா் உயிரிழப்பு

மழை, கடல் சீற்றம்: 3-ஆவது நாளாக கரையில் நிறுத்தப்பட்ட விசைப்படகுகள்

மழையால் வீடு சேதம்: மூதாட்டிக்கு உதவி

SCROLL FOR NEXT