ஜெர்மனி வெளியுறவுத் துறை அமைச்சருடன் பிரதமர். படம் - எக்ஸ்
இந்தியா

இந்தியாவைப் பாராட்டிய ஜெர்மனி!

தில்லியில் பிரதமர் நரேந்திர மோடியை ஜெர்மனி வெளியுறவுத் துறை அமைச்சர் ஜோஹன் வதேபுல் இன்று (செப். 3) சந்தித்துப் பேசினார்.

இணையதளச் செய்திப் பிரிவு

தில்லியில் பிரதமர் நரேந்திர மோடியை ஜெர்மனி வெளியுறவுத் துறை அமைச்சர் ஜோஹன் வதேபுல் இன்று (செப். 3) சந்தித்துப் பேசினார்.

இந்த சந்திப்பின்போது இரு நாடுகளுக்கு இடையிலான பாதுகாப்பு, பொருளாதாரம் மற்றும் வணிக உறவு குறித்து விவாதிக்கப்பட்டதாகத் தெரிகிறது.

இது குறித்து தனது எக்ஸ் தளப் பக்கத்தில் வெளியுறவுத் துறை அமைச்சர் ஜோஹன் வதேபுல் பதிவிட்டுள்ளதாவது,

''பிரதமர் நரேந்திர மோடி உடனான சந்திப்பு சிறப்பாக அமைந்தது. இதில் இரு நாடுகளும் எல்லை தாண்டி தங்கள் கூட்டு ஒத்துழைப்பை விரிவாக்கம் செய்வதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. குறிப்பாக பாதுகாப்பு, பொருளாதாரம், வணிகம் மற்றும் திறமையான உழைப்பு குறித்துப் பேசப்பட்டது. மேலும், உக்ரைனில் நடைபெற்றுவரும் போருக்கு அமைதியான முறையில் தீர்வு காண வேண்டும் என்ற இந்தியாவின் நிலைப்பாட்டை பெரிதும் பாராட்டுகிறோம்'' எனப் பதிவிட்டுள்ளார்.

ஜெர்மனி வெளியுறவுத் துறை அமைச்சர் உடனான சந்திப்புக்குப் பிறகு பிரதமர் நரேந்திர மோடி பதிவிட்டுள்ளதாவது,

''ஜெர்மனி வெளியுறவுத் துறை அமைச்சர் ஜோஹன் வதேபுலை சந்தித்தது மகிழ்ச்சியாக இருந்தது. மூலோபாய கூட்டு ஒத்துழைப்பில் இந்தியாவும் ஜெர்மனியும் 25 வது ஆண்டைக் கொண்டாடுகின்றன.

பெரிய ஜனநாயகம் மற்றும் முன்னேற்றப் பாதையிலுள்ள பொருளாதாரத்தைக் கொண்டுள்ள இரு நாடுகளும் வணிகம், தொழில்நுட்பம், புதிய கண்டுபிடிப்பு, நிலைத்தன்மை, உற்பத்தி மற்றும் இயக்கத்தில் இருதரப்பு பலனை அதிகரிக்கும் பார்வையைக் கொண்டுள்ளன. ஜெர்மனி தலைவர் இந்தியாவுக்கு வர வேண்டும் என்ற அழைப்பை மீண்டும் வலியுறுத்தினேன்'' எனப் பதிவிட்டுள்ளார்.

இதையும் படிக்க | அமெரிக்கா வரியை உயர்த்தாவிட்டால், இந்தியா வரியை குறைத்திருக்காது: டிரம்ப்

German Foreign Minister Johann Wadephul meets Prime Minister Narendra Modi in Delhi

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பிக் பாஸ் 9: 3வது வாரம் வெளியேறும் நபர்களின் பட்டியலில் இடம்பெற்றவர்கள் யார்?

காந்தாரா சாப்டர் 1 தமிழ் வசூல் இவ்வளவா?

சென்னையில் 151.52 மெட்ரிக் டன் பட்டாசுக் கழிவுகள் அகற்றம்!

மேட்டூர் அணை நீர் வெளியேற்றம் 35,000 கனஅடியாக அதிகரிப்பு!

செம்பரம்பாக்கம் ஏரியில் நீர் திறப்பு! வெள்ள அபாய எச்சரிக்கை!

SCROLL FOR NEXT