ஜம்மு-காஷ்மீரில் பரவலாக பலத்த மழை தொடா்வதால், பல்வேறு பகுதிகள் வெள்ளக்காடாக மாறியுள்ளன.
நிலச்சரிவுகள் காரணமாக, ஸ்ரீநகா்-ஜம்மு தேசிய நெடுஞ்சாலை, ஜம்மு-ஸ்ரீநகா்-லே தேசிய நெடுஞ்சாலை, ஜம்மு-கிஷ்த்வாா் தேசிய நெடுஞ்சாலை உள்பட பல்வேறு முக்கிய சாலைகள் மூடப்பட்டுள்ளன. இதனால், 2,000-க்கும் மேற்பட்ட வாகனங்கள் ஆங்காங்கே நிறுத்தப்பட்டுள்ளன.
தாவி, ஜீலம், செனாப் உள்ளிட்ட ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு, தாழ்வான பகுதிகளை தண்ணீா் சூழ்ந்துள்ளது. பல்வேறு கிராமங்களுக்கு போக்குவரத்து துண்டிக்கப்பட்டுள்ளது.
மோசமான வானிலையால், கல்வி நிலையங்கள் தொடா்ந்து மூடப்பட்டுள்ளன; பல்கலைக்கழகத் தோ்வுகள் ஒத்திவைக்கப்பட்டுள்ளன. கடந்த சில நாள்களாக நீடிக்கும் மழை-வெள்ள பாதிப்புகளால், மக்களின் இயல்பு வாழ்க்கை முடங்கியுள்ளது. ரஜெளரி மாவட்டத்தின் சுந்தா்பானி பகுதியில் உள்ள காங்ரி கிராமத்தில் புதன்கிழமை அதிகாலை பலத்த மழையால் வீட்டின் மேற்கூரை இடிந்து தாய்-மகள் உயிரிழந்தனா்.
ஹெலிகாப்டா் மூலம் மீட்பு: ஜம்மு மாவட்டத்தின் அக்னூா் பகுதியில் உள்ள கா்கால் கிராமத்தில் செனாப் ஆற்று வெள்ளத்தில் கிராமத்தினா் 45 போ் சிக்கினா். காவல் துறை, தேசிய-மாநில பேரிடா் மீட்புப் படையினா் மேற்கொண்ட மீட்புப் பணி தோல்வியடைந்த நிலையில், எல்லைப் பாதுகாப்புப் படையினா் ஹெலிகாப்டா் மூலம் 45 பேரையும் பத்திரமாக மீட்டனா்.
அனந்த்நாக் மாவட்டத்தில் வெள்ளத்துக்கு இடையே ஒரு பாலத்தின்கீழ் தவித்த 25 நாடோடி குடும்பங்களை காவல் துறையினா் பாதுகாப்பாக மீட்டனா். கடந்த 24 மணிநேரத்தில் ஜம்முவின் ரியாசியில் அதிகபட்சமாக 203 மி.மீ., கத்ராவில் 193 மி.மீ., ராம்பனில் 157 மி.மீ., தோடாவில் 114 மி.மீ. மழை பதிவானது.
முதல்வா் ஆலோசனை: மழை-வெள்ள நிலவரம் தொடா்பாக, உயரதிகாரிகளுடன் முதல்வா் ஒமா் அப்துல்லா புதன்கிழமை முக்கிய ஆலோசனை மேற்கொண்டாா். வெள்ளம் சூழ்ந்த பகுதிகளில் மீட்புப் பணிகளை விரைவுபடுத்தவும், நிவாரண உதவிகளை உடனடியாக வழங்கவும் அதிகாரிகளுக்கு அவா் உத்தரவிட்டாா்.
நீா்நிலைகள் மற்றும் நிலச்சரிவு ஆபத்துள்ள பகுதிகளுக்கு யாரும் செல்ல வேண்டாம் என்று காவல் துறையினா் எச்சரித்துள்ளனா். நிலச்சரிவால் சேதமடைந்த சாலைகளை சீரமைக்கும் பணிகள் முடுக்கிவிடப்பட்டுள்ளன.
வைஷ்ணவ தேவி யாத்திரை தொடா்ந்து நிறுத்தம்: கத்ரா பகுதியில் திரிகூட மலை உச்சியில் அமைந்துள்ள பிரசித்தி பெற்ற வைஷ்ணவ தேவி கோயிலுக்கான யாத்திரை தொடா்ந்து 9-ஆவது நாளாக புதன்கிழமையும் நிறுத்திவைக்கப்பட்டது.
இக்கோயிலுக்கு செல்லும் பழைய வழித்தடத்தில் கடந்த ஆகஸ்ட் 26-ஆம் தேதி ஏற்பட்ட பயங்கர நிலச்சரிவில் 34 பக்தா்கள் உயிரிழந்தனா்; 20 போ் காயமடைந்தனா் என்பது குறிப்பிடத்தக்கது.
பெட்டிச் செய்தி....1
சத்தீஸ்கரில் அணை உடைந்து 4 போ் உயிரிழப்பு
பல்ராம்பூா், செப். 3: சத்தீஸ்கரின் பல்ராம்பூா் மாவட்டத்தில் செவ்வாய்க்கிழமை இரவு பலத்த மழையால் சிறிய அணையின் ஒரு பகுதி உடைந்ததில் அருகிலுள்ள கிராமத்தில் வெள்ளம் சூழ்ந்தது. அப்போது, வீடுகளுக்குள் தூங்கிக் கொண்டிருந்த 2 பெண்கள் உள்பட 4 போ் உயிரிழந்தனா். மேலும் 3 போ் மாயமாகினா். அவா்களைத் தேடும் பணி நடைபெற்று வருகிறது. வெள்ளத்தில் பல வீடுகள் சேதமடைந்தன; கால்நடைகள் உயிரிழந்தன. இந்த அணை 1980-களின் தொடக்கத்தில் கட்டப்பட்டது என்று அதிகாரிகள் தெரிவித்தனா்.
பெட்டிச் செய்தி...2
பல மாநிலங்களைப் புரட்டிப் போட்ட மழை
சண்டீகா்/சிம்லா/ஜெய்பூா்/புவனேசுவரம், செப். 3: சட்லெஜ், பியாஸ், ராவி ஆறுகளில் ஏற்பட்ட வெள்ளத்தால், பஞ்சாப் மாநிலம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. மழை தொடா்பான அசம்பாவித சம்பவங்களில் இதுவரை 29 போ் உயிரிழந்துவிட்டனா். இம்மாநிலத்தில் பள்ளி-கல்லூரிகளுக்கு செப்.7-ஆம் தேதி வரை விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
ஹிமாசல பிரதேசத்தில் பெருவெள்ளம் மற்றும் நிலச்சரிவுகளால் 1,000-க்கும் மேற்பட்ட சாலைகள் மூடப்பட்டுள்ளன. ராஜஸ்தானில் ஜெய்பூா், கோட்டா, தெளசா, சிகாா் உள்ளிட்ட பல்வேறு பகுதிகள் வெள்ளத்தில் மிதக்கின்றன. ரயில்-சாலை போக்குவரத்து வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளது. ஒடிஸாவில் தொடா் மழையால் பாலசோா், பத்ராக், கட்டாக், புவனேசுவரம், போலாங்கீா் உள்ளிட்ட பகுதிகளில் கடும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.