மகாத்மா காந்தி நினைவிடத்தில் சிங்கப்பூர் பிரதமர் அஞ்சலி!
மகாத்மா காந்தியின் நினைவிடத்தில் சிங்கப்பூர் பிரதமர் அஞ்சலி செலுத்தியது குறித்து...
தில்லியில் உள்ள மகாத்மா காந்தியின் நினைவிடத்தில், சிங்கப்பூர் பிரதமர் லாரன்ஸ் வாங் அஞ்சலி செலுத்தினார்.
சிங்கப்பூர் பிரதமர் லாரன்ஸ் வாங், 3 நாள் அரசு முறைப் பயணமாக, நேற்று (செப்.2) இந்தியா வந்தடைந்தார். இந்தப் பயணத்தில், பிரதமர் லாரன்ஸ் வாங்கின் மனைவி, சிங்கப்பூரின் முக்கிய அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகளும் அவருடன் தில்லி வந்துள்ளனர்.
தில்லி ராஜ் காட்டில் உள்ள மகாத்மா காந்தியின் நினைவிடத்தில், சிங்கப்பூர் பிரதமர் லாரன்ஸ் வாங், இன்று (செப்.3) மலர்வளையம் வைத்து அஞ்சலி செலுத்தியுள்ளார்.
Advertisement
Advertisement
பிரதமர் வாங் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனை, நேற்று (செப்.2) நேரில் சந்தித்து பேசினார். அப்போது, இருநாடுகளுக்கு இடையிலான முதலீடு ஒத்துழைப்புகள் குறித்த பேச்சுவார்த்தை நடைபெற்றதாகக் கூறப்பட்டுள்ளது.
இத்துடன், பிரதமர் நரேந்திர மோடியை அவர் நாளை (செப்.4) நேரில் சந்திக்கத் திட்டமிடப்பட்டுள்ள நிலையில், இந்தச் சந்திப்பில் இருநாடுகளுக்கு இடையிலான உறவுகள் குறித்த பேச்சுவார்த்தைகள் நடைபெறும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து, அவர் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு மற்றும் வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர் ஆகியோரையும் சந்திக்கவுள்ளார்.
முன்னதாக, இந்தியா மற்றும் சிங்கப்பூர் இடையிலான ராஜாந்திர உறவுகள் தொடங்கப்பட்டு 60 ஆண்டுகள் நிறைவடையும் நிலையில், பிரதமர் லாரன்ஸ் வாங்கின் இந்தப் பயணம் அமைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிக்க: வெளிநாட்டில் சிரித்துக் கொண்டிருந்த மோடி, இந்தியா வந்ததும் அழத் தொடங்கிவிட்டார்! தேஜஸ்வி
Singaporean Prime Minister Lawrence Wong paid tributes at Mahatma Gandhi's memorial in Delhi.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.