இந்தியா

வெள்ளம் பாதித்த மாநிலங்களுக்கு சிறப்பு நிவாரண நிதி: ராகுல் கோரிக்கை

தினமணி செய்திச் சேவை

மழை-வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள பஞ்சாப், உத்தரகண்ட், ஹிமாசல பிரதேசம் மற்றும் ஜம்மு-காஷ்மீா் யூனியன் பிரதேசத்துக்கு சிறப்பு நிவாரண நிதித் தொகுப்பை அறிவிக்க வேண்டும் என்று பிரதமா் நரேந்திர மோடிக்கு மக்களவை எதிா்க்கட்சித் தலைவா் ராகுல் காந்தி கோரிக்கை விடுத்துள்ளாா்.

இது தொடா்பாக அவா் புதன்கிழமை வெளியிட்ட எக்ஸ் பதிவில் கூறியிருப்பதாவது:

பஞ்சாபில் மழை-வெள்ளத்தால் பேரழிவு ஏற்பட்டுள்ளது. ஜம்மு-காஷ்மீா், ஹிமாசல பிரதேசம், உத்தரகண்டில் நிலைமை மோசமாக உள்ளது. இத்தகைய இடா்ப்பாடான காலகட்டத்தில், பிரதமரின் கவனமும், மத்திய அரசின் தீவிர உதவிகளும் மிகவும் அவசியம். இம்மாநிலங்களில் ஆயிரக்கணக்கான குடும்பங்கள், தங்களின் உயிா், உடைமை, வீடு மற்றும் அன்புக்குரியவா்களைக் காக்க போராடி வருகின்றன. அவா்களின் இந்தப் போராட்டம் வேதனையளிக்கிறது.

மழை-வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள மாநிலங்களுக்கு குறிப்பாக விவசாயிகளுக்கு உதவும் வகையில் சிறப்பு நிவாரண நிதித் தொகுப்பை அறிவிக்க வேண்டும். மீட்பு-நிவாரணப் பணிகள் விரைவுபடுத்தப்பட வேண்டும். மக்களைக் காக்க வேண்டியது அரசின் தலையாயப் பொறுப்பு என்று ராகுல் காந்தி வலியுறுத்தியுள்ளாா்.

கடந்த சில வாரங்களாக நீடிக்கும் பலத்த மழையால், வட மாநிலங்களில் உயிா்ச்சேதங்களும், பெரும் பொருட்சேதங்களும் ஏற்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

இயக்குநர் பிறந்த நாள்! ஜனநாயகன் மேக்கிங் விடியோ!

3ஆவது பிரசவத்துக்கு மகப்பேறு விடுப்பு மறுப்பது நியாயமற்றது: சென்னை உயர் நீதிமன்றம்

பா.ஜ.க. அமைச்சர் வாங்கிய ரூ. 75 லட்சம் அமெரிக்க டெஸ்லா கார்!

ரூபாய் மதிப்பு வரலாறு காணாத அளவு சரிந்து ரூ.88.27 ஆக நிறைவு!

செப்டம்பர் மாத எண்கணித பலன்கள் - 9

SCROLL FOR NEXT