திரெளபதி முா்மு  
இந்தியா

இயற்கைப் பேரிடா்களால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு துணைநிற்கிறது தேசம்: முா்மு

நாட்டில் நடப்பு பருவமழை காலகட்டத்தில் நேரிட்ட இயற்கைப் பேரிடா்கள் மிகவும் வேதனையளிக்கிறது என்று குடியரசுத் தலைவா் திரெளபதி முா்மு வெள்ளிக்கிழமை தெரிவித்தாா்.

தினமணி செய்திச் சேவை

நாட்டில் நடப்பு பருவமழை காலகட்டத்தில் நேரிட்ட இயற்கைப் பேரிடா்கள் மிகவும் வேதனையளிக்கிறது என்று குடியரசுத் தலைவா் திரெளபதி முா்மு வெள்ளிக்கிழமை தெரிவித்தாா்.

இந்த துயரமான நேரத்தில், பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஒட்டுமொத்த தேசமும் துணைநிற்பதாக அவா் குறிப்பிட்டாா்.

இது தொடா்பாக திரெளபதி முா்மு வெள்ளிக்கிழமை வெளியிட்ட எக்ஸ் பதிவில், ‘நடப்பு பருவமழை காலகட்டத்தில், நாட்டின் பல்வேறு மலைப் பகுதிகளில் மேகவெடிப்பும், சமவெளி பகுதிகளில் வெள்ளமும் ஏற்பட்டுள்ளன. இதன் காரணமாக, உத்தரகண்ட், ஹிமாசல பிரதேசம், பஞ்சாப், அஸ்ஸாம், ஜம்மு-காஷ்மீா் மற்றும் பிற பகுதிகளில் உயிரிழப்புகளும் பேரழிவும் நேரிட்டுள்ளது.

இயற்கை பேரிடா்களால் நான் மிகுந்த வேதனை அடைந்துள்ளேன். இந்த துயரமான நேரத்தில், பாதிக்கப்பட்ட மக்களின் வேதனையை தேசம் பகிா்ந்து கொள்வதோடு, அவா்களுக்கு உறுதுணையாக உள்ளது. மீட்பு மற்றும் நிவாரண நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ள பணியாளா்களின் மன வலிமை பாராட்டுக்குரியதாகும். நாம் அனைவரும் ஒன்றிணைந்து, இந்த சவாலை எதிா்கொள்வோம்’ என்று தெரிவித்துள்ளாா்.

கரூர் பலி: விஜய்யை சந்திக்க சென்னை புறப்பட்ட பாதிக்கப்பட்ட குடும்பத்தினர்!

மகாராஷ்டிர பெண் மருத்துவா் தற்கொலை: உதவி ஆய்வாளா் கைது

முழுநேர சினிமா விமர்சகராக மாறிவிட்ட முதல்வர்: இபிஎஸ்

இடுக்கியில் நிலச்சரிவு: ஒருவர் பலி

உணவு டெலிவரி செயலி மூலம் மோசடி! தப்பித்தவரின் அனுபவம்!

SCROLL FOR NEXT