கோப்புப் படம் 
இந்தியா

குஜராத் மின் நிலையத்திற்குள் புகுந்த தண்ணீர்! காணாமல்போன 5 தொழிலாளர் நிலை என்ன?

குஜராத்தில் மின் நிலையத்தினுள் ஆற்று நீர் புகுந்ததில் 5 தொழிலாளிகள் மாயமாகியுள்ளனர்...

இணையதளச் செய்திப் பிரிவு

குஜராத்தில் நீர் மின்னுற்பத்தி நிலையத்திற்குள் திடீரென புகுந்த தண்ணீரில் சிக்கிய 5 தொழிலாளிகளைக் காணவில்லை. இவர்களைத்த் தேடும் பணிகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

மாஹிசாகர் மாவட்டத்தின், லுனாவாடா நகரில் அமைந்துள்ள இந்த நீர் மின்னுற்பத்தி நிலையத்தின் மிகப் பெரிய கிணற்றுக்குள் இறங்கி நேற்று (செப். 4, வியாழக்கிழமை) 15 தொழிலாளிகள் பராமரிப்புப் பணிகளில் ஈடுபட்டிருந்தனர்.

அந்த நேரத்தில், இந்தப் பகுதியில் அமைந்துள்ள மாஹி ஆற்றின் மீது அமைந்துள்ள கடானா அணை திறந்துவிடப்பட்டது. அப்போது திடீரென வெளியேறிய நீரானது, லுனாவாடா நீர் மின் நிலையத்தினுள் புகுந்துள்ளது.

பராமரிப்புப் பணிகள் நடைபெற்ற கிணற்றுக்குள்ளும் ஆற்று நீர் புகுந்தது, கிணற்றில் இருந்த தொழிலாளிகள் சிக்கிக் கொண்டனர். எனினும், 10 தொழிலாளிகள் மட்டும் தப்பித்து வெளியே வந்தனர். ஆனால், மீதமுள்ள 5 தொழிலாளிகளைக் காணவில்லை எனக் கூறப்படுகிறது.

தொடர்ந்து, உடனடியாகத் தொழிலாளிகளை மீட்கும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன. இருப்பினும், அவர்கள் 5 பேரின் நிலை குறித்து இதுவரை எந்தவொரு தகவலும் கிடைக்கவில்லை என அதிகாரிகள் கூறியுள்ளனர்.

இந்த நிலையில், காணாமல்போன தொழிலாளிகளை மீட்கும் பணியில் இன்று தேசிய மற்றும் மாநில பேரிடர் மீட்புப் படைகளும், தீயணைப்புப் படையினரும் ஈடுபட்டுள்ளனர்.

இத்துடன், தண்ணீருக்குள் மூழ்கிச் சென்று தேடுதல் பணிகளை மேற்கொள்ளும் வகையிலான சிறப்பு வாகனமும் வரவழைக்கப்பட்டுள்ளது.

இதையும் படிக்க: மோசமான வானிலை..! தரையிறங்க முடியாமல் தவித்த ஒடிசா முதல்வர் சென்ற விமானம்!

An intensive search is underway for five workers who went missing after a river suddenly entered a hydroelectric power plant in Mahisagar district of Gujarat.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ம.க.ஸ்டாலின் மீது கொலை முயற்சி- நயினார் நாகேந்திரன் கண்டனம்

தில்லியில்.. சட்டவிரோதமாக வசித்த 15 வெளிநாட்டினர் வெளியேற்றம்!

கடன் வட்டியைக் குறைத்த கரூர் வைஸ்யா வங்கி!

இயக்குநர் பிறந்த நாள்! ஜனநாயகன் மேக்கிங் விடியோ!

3ஆவது பிரசவத்துக்கு மகப்பேறு விடுப்பு மறுப்பது நியாயமற்றது: சென்னை உயர் நீதிமன்றம்

SCROLL FOR NEXT