ஷேக் அப்துல் ரஷீத்  கோப்புப் படம்
இந்தியா

குடியரசு துணைத் தலைவர் தேர்தல்: பொறியாளர் ரஷீத் வாக்களிக்க அனுமதி!

பாரமுல்லா எம்.பி. ரஷீத் வாக்களிக்க தில்லி நீதிமன்றம் ஒப்புதல் அளித்துள்ளது.

இணையதளச் செய்திப் பிரிவு

ஜம்மு-காஷ்மீரின் பாரமுல்லாவைச் சேர்ந்த மக்களவை எம்.பி. பொறியாளர் ரஷீத் செப்டம்பர் 9 ஆம் தேதி நடைபெறும் குடியரசுத் துணைத் தல்வர் தேர்தலில் வாக்களிக்க தில்லி உயர்நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது.

நாட்டின் 14-ஆவது குடியரசு துணைத் தலைவரான ஜகதீப் தன்கா் ஜூலை 21-இல் தனது பதவியை ராஜிநாமா செய்தாா். 2027, ஆக.10-ஆம் தேதி ஜகதீப் தன்கரின் பதவிக்காலம் நிறைவடைய இருந்த நிலையில், உடல்நிலையை காரணம் காட்டி 2 ஆண்டுகளுக்கு முன்பாகவே தனது பதவியை ராஜிநாமா செய்தாா்.

இதனைத் தொடர்ந்து, புதிய குடியரசு துணைத் தலைவரை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் பணிகளை உடனடியாக தொடங்கிய இந்திய தேர்தல் ஆணையம், குடியரசு துணைத் தலைவர் தேர்தல் செப்டம்பர் 9 ஆம் தேதி நடத்தப்படும் என்றும் அறிவித்துள்ளது.

தேர்தலில் வாக்களிக்க அனுமதி கோரிய ரஷீத்தின் மனுவை கூடுதல் அமர்வு நீதிபதி சந்தர் ஜித் அனுமதித்தார். முன்னதாக நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடரில் கலந்துகொள்ள ஜூலை 24 முதல் ஆகஸ்ட் 4 வரை நீதிமன்றத்தால் ரஷீத்துக்கு காவல் பரோல் வழங்கப்பட்டது.

இந்த நிலையில் குடியரசு துணைத் தலைவர் தேர்தலில் வாக்களிக்க பொறியாளர் ஷேக் அப்துல் ரஷீத்துக்கு நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது.

கடந்த 2017-ஆம் ஆண்டு பயங்கரவாத சம்பவங்களுக்கு நிதி வழங்கிய குற்றச்சாட்டில் ரஷீத்தை சட்டவிரோத நடவடிக்கைகள் தடுப்பு சட்டத்தின்கீழ் (யுஏபிஏ) என்ஐஏ அதிகாரிகள் கடந்த 2019-இல் கைது செய்தனர். அதன்பிறகு அவா் தில்லி திகாா் திறையில் அடைக்கப்பட்டாா்.

பொறியாளரான ரஷீத், கடந்த மக்களவைத் தோ்தலில் ஜம்மு-காஷ்மீரின் பாரமுல்லா தொகுதியில் சுயேச்சையாகப் போட்டியிட்டு, சிறையில் இருந்தபடியே வெற்றிபெற்று எம்.பி.யாக உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கி(ளி)க்... சைத்ரா அச்சார்!

கடலூர் ரசாயனக் கசிவு விபத்து: பாதுகாப்பு ஏற்பாடுகளில் ஆலை நிர்வாகம் அலட்சியமா?

ஆசிய கோப்பை ஹாக்கி: இறுதிச்சுற்றில் இந்தியா! சீனா படுதோல்வி!

திருவள்ளுவர் சிலைக்கும் முதல்வர் மு.க.ஸ்டாலின் மரியாதை!

பின்லேடனுக்காக அனுப்பப்பட்ட அதே குழுதான் வடகொரியாவுக்கும்? 2019-ல் அமெரிக்காவின் செயல்!

SCROLL FOR NEXT